ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 2026ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்!!

2026ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 2026ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்!!
Published on
Updated on
1 min read

சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய பிரபல காமன்வெல்த் போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும்.

இந்நிலையில், 2026ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் 6வது முறையாகவும், விக்டோரியா மாகாணத்தில் இரண்டாவது முறையாகவும் நடைபெறவுள்ளது.

காமன்வெல்த் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து விக்டோரியா மக்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். அதன்படி, விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஜீலாங், பெண்டிகோ, பல்லாரட், கிப்ஸ்லாண்ட் ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனிடையே, 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com