
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் Arkady Dvorkovich மற்றும் ஒலிம்பியாட் தொடரின் இயக்குநர் பரத் சிங் சௌகான் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் கடைபிடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்றான ஒலிம்பிக் தீபத்தைப்போல் செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
ஒலிம்பியாட் தீபமானது செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்படவுள்ளது. வரும் காலங்களில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்படடுள்ளது.
இந்தியாவில் தீபம் ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்பட்டு இறுதியில் போட்டி நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.