மகாபலிபுரத்தில் உலகத்தரத்திலான தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடமி....!!!

மகாபலிபுரத்தில் உலகத்தரத்திலான தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடமி....!!!

ஒரு புதுயுக கால் பந்தாட்ட அகாடமியான FC Madras (எஃப்சி மெட்ராஸ்), சென்னை அருகே மகாபலிபுரத்தில் (Mahabalipuram) உலகத்தரத்திலான கால் பந்தாட்ட அகாடமி ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறது.  

அகில இந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு (AIFF) மற்றும் ஆசிய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றால் குறித்துரைக்கப்பட்டவாறு FIFA தரநிலைகளுக்கு இணக்கமானதாக “ஹோம் ஆஃப் எஃப்சி மெட்ராஸ்” என்ற இவ்வளாகம், உருவாக்கப்பட்டிருக்கிறது.  23 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வளாகத்தில் இரவு நேரத்திலும் ஜொலிக்கும் ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் விளையாடுவதற்கான கால்பந்தாட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  

கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம், உடல் வலுவை மேம்படுத்தி உடற்தகுதியைப் பேணுவதற்கான மையம், மருத்துவ சிகிச்சை மற்றும் காயங்களிலிருந்து மீண்டு குணமடைவதற்கான சிகிச்சை மையங்கள், சர்வதேச தரத்தில் ஒரு உள்ளரங்க ஃபுட்ஸ்சால் மைதானம், 6 லேன்கள் கொண்ட நீச்சல் குளம், நவீன சமையலறை மற்றும் உணவுக்கூடங்களுடன் கூடிய தங்கும் விடுதி, NIOS (திறந்த நிலை பள்ளி கல்விக்கான தேசிய நிறுவனம்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மாற்றுவழி கற்றல் மையம் ஆகியவை இவ்வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு சிறப்பு வசதிகளுள் சிலவாகும்.  

திறன் உருவாக்கல் என்ற குறிக்கோளின் மீது நீண்டகால பொறுப்புறுதியை இந்த அகாடமி கொண்டிருக்கிறது.  கால்பந்தாட்டம், கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கல்வி முறையியலுடன் உலகத் தரத்திலான கால் பந்தாட்ட உட்கட்டமைப்பு வசதியையும், தனித்துவமான கலவையை வழங்குவது இதன் நோக்கமாகும்.  மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான இந்த உள்ளுறை வளாகத்தில் 130 இளம் வீரர்கள் வரை படிக்கலாம்.  அவர்களது கால் பந்தாட்ட பயிற்சி, தங்கியிருப்பு மற்றும் கற்றல் தேவைகள் அனைத்தையும் முழுமையாகப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டதாக இது இருக்கும்.  

திறனும், ஆர்வமும் மிக்க கால் பந்தாட்ட வீரர்களை தேடி கண்டறிவதற்கு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டத்தின் மூலம் திறமையான இளம் கால் பந்தாட்ட வீரர்களை  தேர்வு செய்து அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் (கல்வி உதவித்தொகை) – ஐ எஃப்சி மெட்ராஸ் வழங்குகிறது.  சர்வதேச அளவில் இந்திய நாட்டின் பிரதிநிதிகளாக சிறப்பாக விளையாடி தேசத்திற்கு பெருமை சேர்க்கின்ற கால் பந்தாட்ட வீரர்களை உருவாக்குவதும் மற்றும் இந்தியாவில் கால் பந்தாட்டத்திற்கு மிக சிறப்பான பயிற்சி வழங்கும் மையமாகவும் திகழ்வதே இந்த அகாடமியின் நோக்கமாகும்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com