26 வயதில் விராட்டை விஞ்சிய அசுரன்.. கெய்லை தாண்டிய சிக்சர்கள்.. அடுத்தது ரோஹித்? 'அபிஷேக் சர்மா'வின் அசத்தல் இன்னிங்ஸுக்கு குவியும் பாராட்டுக்கள்!

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சாதனை கிறிஸ் கெய்ல் வசம் உள்ளது. இவரை மற்றொரு சாதனையில் முந்தியிருக்கிறார் அபிஷேக்.
26-Year-Old Monster Surpasses Virat Kohli.. Sixes Surpass Gayle.. Next is Rohit? Praise Pours In for Abhishek Sharma's Sensational Innings!
26 வயதில் விராட்டை விஞ்சிய அசுரன்.. கெய்லை தாண்டிய சிக்சர்கள்.. அடுத்தது ரோஹித்? அபிஷேக் சர்மாவின் அசத்தல் இன்னிங்ஸுக்கு குவியும் பாராட்டுக்கள்!BCCI.TV
Published on: 
Updated on: 
2 min read

அபிஷேக் சர்மா ஒரு அதிரடி பேட்ஸ்மேன் என்பதை நாம் அறிவோம். அதை இன்று மேலும் ஒருமுறை அழுத்திப் பதியவைத்திருக்கிறார்.

199 என்ற கடினமான இலக்கை துரத்தினாலும் 5 ஓவரில் 100 ரன்கள் அடித்து பாதி இலக்கை எட்டிவிட்டது இந்தியா. காரணம் அபிஷேக் மற்றும் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம்.

நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் அவர் அடித்த சதத்தின் மூலம் 3வது டி20 போட்டியையும் வென்றுள்ளது இந்திய அணி. 35 பந்துகளில் சதம் அடித்த அபிஷேக், 9 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் அடித்து இன்னிங்ஸ் முழுவதும் வான வேடிக்கை காட்டினார்.

இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது 4வது சதம், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 11வது. இதன்மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்திய வீரர்களில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள கோலி 10 சதங்கள் அடித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக ஒரு சதமும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 9 சதங்களும் அடித்துள்ளார்.

Abhisheik Sharma
Abhisheik Sharma

இந்த சாதனை அபிஷேக் சர்மாவால் முறியடிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் இந்திய அணிக்காக டி20 சர்வதேச போட்டிகளில் 4 சதங்களும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2 சதங்களும், சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக 5 சதங்களும் அடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சாதனை கிறிஸ் கெய்ல் வசம் உள்ளது. இவரை மற்றொரு சாதனையில் முந்தியிருக்கிறார் அபிஷேக்.

10க்கும் அதிக சிக்ஸர்கள் அடித்த இன்னிங்ஸ்கள் அதிகமாக விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அபிஷேக் தற்போது குறைந்தபட்சம் 10 சிக்ஸர்களுடன் மூன்று டி20 சர்வதேச இன்னிங்ஸ்களைப் பதிவுசெய்ததுள்ளார். முன்னதாக கெய்ல் இரண்டு முறை இப்படிப்பட்ட இன்னிங்ஸ் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் அடித்த 11 சிக்ஸர்கள் மூலம் 158 சர்வதேச டி20 சிக்ஸர்கள் அடித்துள்ளார் அபிஷேக். இவருக்கு முன்னதாக சூர்யகுமார் மற்றும் ரோஹித் சர்மா முறையே 179 மற்றும் 205 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். இந்த சாதனைகளை விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபிஷேக்கின் அதிரடி ஆட்டம் இந்தியா அபார வெற்றி பெற வழிவகுத்தது. இதன் மூலம் 3-0 என 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. அடுத்தபோட்டி அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது.

26-Year-Old Monster Surpasses Virat Kohli.. Sixes Surpass Gayle.. Next is Rohit? Praise Pours In for Abhishek Sharma's Sensational Innings!
38 பந்துகளில் 113 ரன்கள்.. 'அபிஷேக்' அபாரம்! சூர்யவன்ஷி அதிரடி...13.2 ஓவரில் ஆட்டத்தை முடித்த இந்தியா அணி..!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com