அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில்...இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில்...இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
Published on
Updated on
1 min read

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிாிக்கெட் போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. 

அயா்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிாிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயா்லாந்து அணி வீரா்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினா். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 23-ந்தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com