ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் அஸ்வின்!!

எல்லா முடிவுக்கு பின்னாலும் ஒரு நல்ல துவக்கம் உண்டு..
ashwin announce retirement from ipl
ashwin announce retirement from ipl
Published on
Updated on
1 min read

சி.எஸ்.கே -யின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

ஏற்கனவே கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்ற  நிலையில், ஐபிஎல் மற்றும் அனைத்து விதமான பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.

38 வயதான இவரை 2025 ஆண்டு 9.75 கோடிக்கு சி.எஸ்.கே நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. தனது ஓய்வு குறித்து X தளத்தில் பதிவிட்டிருந்த அஸ்வின்,  “எல்லா  முடிவுக்கு பின்னாலும் ஒரு நல்ல துவக்கம் உண்டு,  IPL -கிரிக்கெட் போட்டியில் எனது பயணம் முடிவுக்கு வருகிறது.  IPL  -க்கும்  BCCI -க்கும் மிகப்பெரிய நன்றி, நீங்கள் எனக்கு தந்த அனுபவம் மறக்க முடியாதது" என பதவிட்டிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com