ஆசியகோப்பை தொடரில் நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது இந்தியா.
இந்தியா - நேபாளம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து ஆடிய நேபாள அணி, 37 புள்ளி 5 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில் தொடங்கிய ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்கையில் 2 புள்ளி 1 ஓவர்களில் மழை குறிக்கிட்டதை தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நீண்ட நேரம் பெய்ததால் 23 ஓவர்கள் கொடுக்கப்பட்டு, 145 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற இலக்குடன் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு இருவரும் அரை சதமடித்தனர். இறுதியில் இந்திய அணி 20 புள்ளி 1 ஓவர்களில், 10 விக்கெட் வித்தியாசத்தில் 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் கேப்டன் ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.