டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி...முதலில் களமிறங்கும் இந்திய அணி!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறும் நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீஃல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்த்தில் உள்ள நரேந்திர மோடி கிாிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், 2003-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பீஃல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்காரணமாக, முதலில் இந்திய அணி களமிறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியாவின் பேட்டிங்கை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

முன்னதாக, டாஸ் நேரம் முடிந்ததையடுத்து சிறப்பு ஏற்பாடாக விமானப் படையின் வான்வெளி சாகசம், இசை நிகழ்ச்சி, லேசர் மற்றும் லைட் ஷோவும் நடைபெற்றுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com