வரலாற்றில் முதல்முறை! ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் - தோல்விக்கு காரணம் என்ன?

எந்த அணியும் எளிதாக ஆஸ்திரேலியா மண்ணுக்குச் சென்று அந்த அணியை வீழ்த்திவிட முடியாது. இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி ஒருமுறைகூட இதைச் செய்ததில்லை.
வரலாற்றில் முதல்முறை! ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் - தோல்விக்கு காரணம் என்ன?
வரலாற்றில் முதல்முறை! ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் - தோல்விக்கு காரணம் என்ன?
Published on
Updated on
4 min read

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான வங்கதேசத்தின் டெஸ்ட் வெற்றி கிரிக்கெட் உலகில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே போட்டிக்கு முந்தைய கணிப்புகளை சுக்கு நூறாக்கிய அதிர்ச்சிக்குரிய தோல்விகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிர்ச்சிக்குரிய தோல்வி

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு 1882ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா பெற்ற வெற்றி இதேபோல ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1998ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்தது. ஆனால் குறைந்தபட்சம் ஜிம்பாப்வே அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தியது.

வங்கதேசம் வெற்றிபெற்ற தருணம்
வங்கதேசம் வெற்றிபெற்ற தருணம்

2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் இந்தியா அணி பெற்ற வெற்றியை ஓரளவு இத்துடன் ஒப்பிடலாம். அல்லது பாகிஸ்தான் அணி 1952ல் இந்தியாவையும் 54ல் இங்கிலாந்தையும் வென்றதையும் இணையாகக் கூறலாம்.

ஆனால் வரலாற்றில் எத்தனை போட்டிகளை புரட்டிப் பார்த்தாலும் இதைவிட நம்ப முடியாத ஒரு தோல்வியை கண்டடைய முடியாது.

வங்கதேசத்தின் நிலை

ஏனென்றால் இது சாதாரண underdogs வெற்றி பெறும் கதை அல்ல.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே போட்டியே நடக்க முடியாத அளவு வித்தியாசம் உள்ளது. என்னதான் வங்கதேசம் 26 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினாலும், இத்தனை ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அந்த அணியின் மீதான ஏளனப் பார்வையை ஒரு புள்ளிக்கூட குறைத்துக்கொள்ளவில்லை.

இதுவரை மொத்தமே 6 டெஸ்ட் போட்டிகள்தான் நடந்திருக்கிறது. அதிலும் இரண்டுதான் ஆஸ்திரேலியாவில். இரண்டுமுறை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு வங்கதேசத்துடன் விளையாட செலவழிக்க முடியாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) கைவிரித்தது.

இதுதவிர 15 ஒருநாள் போட்டிகள், 8 டி-20 போட்டிகள் மட்டுமே இந்த நாடுகளுக்கு இடையே நடந்திருக்கிறது. அதாவது ஆஸ்திரேலியா அதன் காலண்டரில் ஆண்டுக்கு ஒரு போட்டிகூட வங்கதேசத்துக்கு ஒதுக்காது என்பதுதான் நிலை.

ஆஸ்திரேலிய மண்ணில் திண்டாடும் ஆசிய அணிகள்!

AUS vs BAN
AUS vs BAN

இதற்கும் காரணம் இருக்கிறது. எந்த அணியும் எளிதாக ஆஸ்திரேலியா மண்ணுக்குச் சென்று அந்த அணியை வீழ்த்திவிட முடியாது. இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி ஒருமுறைகூட இதைச் செய்ததில்லை. பாகிஸ்தான் கடந்த 31 ஆண்டுகளாக இதைச் செய்யவில்லை.

இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் சிலமுறை வெற்றி பெற்றிருந்தாலும் அதற்கு முந்தைய 46 போட்டிகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

வரலாற்று ரீதியாக கூட்டிக்கழித்துப் பார்த்தால் வங்கதேசம் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த லாஜிக்கலாக வாய்ப்பே இல்லை.

வரலாற்றில் முதல்முறை! ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் - தோல்விக்கு காரணம் என்ன?
IND vs SL: டெஸ்ட் ஆக்ரோஷத்தை காட்ட தயாராகும் இந்தியா - ஜியோ ஹாட்ஸ்டாரில் லைவ் பார்க்க முடியுமா?

ஆசியாவின் 4 முக்கிய கிரிக்கெட் நாடுகளில் மிகவும் சிறியது வங்கதேசம். தனது முழு வரலாற்றிலும் வெளிநாட்டில் ஒன்பது டெஸ்ட் வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரஹீம், டஸ்கின் அகமது, டைஜூல் இஸ்லாம் ஆகிய மூவரைத் தவிர மற்ற வீரர்கள் எல்லாம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாதவர்கள்/வீசாதவர்கள்.

இவர்கள் 1,600-க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் நான்கு பந்துவீச்சாளர்களையும், 66 சதங்கள் மற்றும் 25,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் கொண்ட முதல் ஏழு பேட்ஸ்மேன்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றனர். சாதாரண வெற்றி அல்ல, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஆதிக்கத்தை இழக்காமல் உறுதியாக வென்றனர்.

Team Bangladesh
Team Bangladesh

ஆஸ்திரேலியா தோல்விக்கு காரணங்கள் என்ன?

இது வங்கதேச அணிக்கு உணர்வுப்பூர்வமான வெற்றி. மறுபக்கம் ஆஸ்திரேலிய ரசிகர்களால் சகித்துக்கொள்ளவே முடியாத தோல்வி. அணித் தேர்வர்களும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உறுப்பினர்களும் யாரைக் கைகாட்டுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

போட்டிக்கு முன்பு கேமரூன் கிரீன் தேர்வு குறித்து அதிக கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் அவர் சதம் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு சற்று ஆசுவாசம் அளித்தார்.

மார்னஸ் லாபுஷேன் ஒன்றரை மணி நேரம் சிறப்பாக ஆடிப் பின்னர் ஒரு தவறு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் ஜேக் வெதரால்டு ஒரு மோசமான டெஸ்ட் போட்டியை ஆடினார்.

தோல்விக்குப் பிறகு பேட்டி அளித்த கேப்டன் பேட் கம்மின்ஸ், "அவர்கள் எங்களை அனைத்து அம்சங்களிலும் மிஞ்சினார்கள். அவர்கள் பொறுமையுடனும் ஒழுக்கத்துடனும் விளையாடினார்கள்... எங்களது போட்டிக்கான தயாரிப்பு சிறப்பாகவே இருந்தது. எனவே, எந்தவித சாக்குப்போக்கும் இல்லை" என்று கூறினார்.

Cameron Green
Cameron GreenICC

உண்மையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பொறுப்பற்ற முறையிலோ அலட்சியமாகவோ விளையாடியதாக குற்றம் சாட்ட முடியாது. அவர்களின் வெளிப்படாத பலவீனங்களை தங்களது கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் வங்கதேசம் வெளிக்கொண்டு வந்தது எனலாம்.

அதற்கான பெருமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸையும், அசைக்க முடியாத கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாந்தோவையும்தான் சாரும். நஜ்முல் ஹொசைன் ஷாந்தோ அடுத்தடுத்து மிகச் சரியான முடிவுகளை எடுத்தார்.

பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடாததால் 198 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியாவின் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் முறையே 6 மற்றும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆனால் மிக மிக தாமதமாக.

பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும், சுழற்பந்து வீச்சுக்கு நல்ல வாய்ப்பளித்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னர் நாதன் லியோன் மோசமான ஃபார்மில் இருந்ததால் அதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

Nathan Lyon
Nathan Lyon

முதல் இன்னிங்ஸில் 25 வயது வங்கதேச வீரர் தன்சித் ஹசன் சதம் அடிக்க, அந்த அணி 426 ரன்கள் குவித்தது. வேறு எந்த அணியாக இருந்தாலும் முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே வங்கதேசத்தின் வெற்றி உறுதியாகியிருக்கும். ஆனால் எதிரில் விளையாடியது ஆஸ்திரேலியா என்பதால் இது தற்காலிக முன்னேற்றமாக பார்க்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் முன்னேறியிருந்தது. ஆனால் அவர்கள் விட்டுக்கொடுத்த ரன்களை எட்டிப்பிடிக்க இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. கேமரூன் கிரீன் 200 பந்துகள் நின்றாலும் அவருக்கு கம்பெனி கொடுக்க முடியாமல் மற்றவர்கள் திணறினர்.

4ஆம் நாள் வங்கதேச அணி வெறும் 57 ரன்களை மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. தொடக்க பேட்ஸ்மேன் ஹாசன் டக் அவுட் ஆனபோதிலும், இஸ்லாம் மற்றும் ஹக் அதை எளிதாகத் தட்டிச் சென்றனர்.

தற்போது மேலும் அவமானத்திலிருந்து தப்பிக்கவும் வங்கதேசம் அணிக்கு பாடம் கற்பிக்கவும் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இரண்டாவது டெஸ்ட் போட்டி தான். இதில் ஓப்பனர் வெதரல்டுக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேன் மேத்யூ ரென்ஷாவை இணைத்துள்ளனர்.

வங்க தேசம் மீண்டும் வென்று தொடரைக் கைப்பற்றி வரலாறு படைக்குமா அல்லது ஜாம்போவான்களுக்கு எதிரான ஒரு வெற்றியின் மகிழ்ச்சியுடனே வீடு திரும்புமா என்பதைப் பார்க்கலாம்.

வரலாற்றில் முதல்முறை! ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் - தோல்விக்கு காரணம் என்ன?
Rishabh Pant: மீண்டும் அதே தவறு! "காமன்சென்ஸ் வேண்டாமா" - காட்டமாக விமர்சித்த முன்னாள் வீரர்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com