சர்வதேச குத்துச்சண்டை: தமிழ் நாட்டை சேர்ந்த சிறுவன் வெள்ளிப் பதக்கம்!

சர்வதேச குத்துச்சண்டை: தமிழ் நாட்டை சேர்ந்த சிறுவன் வெள்ளிப் பதக்கம்!
Published on
Updated on
1 min read

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 9 வயது சிறுவன் விமல் ராஜ் இந்தியாவிற்காக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டி கடந்த மாதம் 18 ஆம் தேதி துவங்கி 29ம் தேதி வரை இந்தோனேஷியாவில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூஸிலாந்து,ஆஸ்திரேலியா நெதர்லாந்து உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் இந்தியாவிற்காக தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் விமல்ராஜ் பங்கேற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இந்த நிலையில் சென்னை திரும்பிய அவர் வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இது குறித்து பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் கூறியதாவது," இந்தியாவிற்காக விளையாடியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. முதல் போட்டி விளையாடிய போது சிறிதளவு தயக்கமும் பதட்டமும் இருந்தது. அவர் இந்தியாவிற்காக மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பெருமை சேர்ப்பேன். ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது தான் எனது லட்சியம்" எனவும் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சிறுவனின் தந்தை விஜய், தனது மகனிற்கு சிறுவயதிலிருந்தே குத்துச்சண்டை போட்டியில் அதிக ஆர்வம் இருந்து வருவதாகவும், இதனால் கடன் வாங்கி தனது சொந்த செலவில் போட்டிக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன் மகனை விட திறமையானவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவி செய்தால் இந்தியாவிற்காக விளையாடி பல்வேறு பதக்கங்களை வெல்வதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com