மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டு வைத்து அவரைக் கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போபராட்டமானது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராடியும் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வில்லை.
இவ்வாறிருக்க கடந்த மே மாதம் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடநதது. அப்போது மத்திய அரசின் ககவனத்தை ஏற்க மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி அமைதி பேரணியை நடத்தினர். அப்போது புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வாயிலில் மல்யுத்த வீரர்களை நுழைய விடாமல் காவல்துறையினர் தடுத்து குண்டுக்கட்டாக அவர்களைக் கைது செய்தனர்.
காவல்துறையினாரின் இந்த மூர்கத்தனமான நடவடிக்கையை கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இவ்வளவு போராடியும் தங்களுக்கான நீதி கிடைக்காததை அடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்து தாங்கள் பாடுபட்டு வாங்கிய அத்தனை பதக்கங்களையும் கங்கை ஆற்றில் வீசுவதாக முடிவெடுத்து வீரர்கள் கங்கை ஆற்றுக்கு வந்து தங்களது பதக்கங்களை ஆற்றில் விட சென்றனர். அப்போது அங்கிருந்த ஹரித்துவார் மக்கள் அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் தங்களது முடிவைக் கைவிட்டனர்.
இதையடுத்து, மல்யுத்த வீரர்கள் முடிவை மாற்றிக்கொண்டதை பிரிஜ் பூஷன் விமர்சித்திருந்தார். ஆதாவது, மல்யுத்த வீரர்கள் தங்களின் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவது போலச்சென்று அவற்றை ஆற்றில் வீசாமல் திரும்பியது ஒருவித போராட்ட யுக்தி என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், போக்சோ உள்ளிட்ட இரு வழக்குகள் பிரிஜ் ஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் உள்ள அவரது இல்லத்தில் 12 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வாறிருக்க, இந்த வழக்கில் மீண்டும் ஒரு திருப்பு முனையாக பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தின்போது பிரதமர் மோடியை இழிவுபடுத்தி கோஷமிட்டதாக சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகார்தாரர் அளித்த வீடியோவில் வெறுப்பு முழக்கங்கள் இல்லை என டெல்லி போலீசார் பதிலளித்த நிலையில், ஜூலை 7ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.