பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம்
Published on: 
Updated on: 
1 min read

பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடர் லீக் சுற்று ஆட்டத்துடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. அத்துடன், சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் பல்வேறு போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தேர்வு குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு குழுவியில் இருந்த முன்னாள் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக் ஆகியோரை நீக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய தேர்வாளர் நியமனம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com