காமன்வெல்த் மல்யுத்த போட்டிகள்.. ஒரேநாளில் 3 தங்கம் வென்று இந்தியா அசத்தல்!!

காமன்வெல்த் மல்யுத்த போட்டிகள்.. ஒரேநாளில் 3 தங்கம் வென்று இந்தியா அசத்தல்!!
Published on
Updated on
2 min read

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளில் இந்தியா ஒரேநாளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம், பதக்கப்பட்டியலிலும் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய வீரர் பஜ்ரங் புனியா

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில், ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக், கனடா வீராங்கனை அனா கொடினசை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய வீரர் தீபக் புனியா

23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இளம் வீராங்கனை அன்ஷு மாலிக்

முன்னதாக, 21வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

மல்யுத்த போட்டி இந்திய வீரர் மோஹித் கிரேவால்

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார்.

மல்யுத்த போட்டி இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன்

மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 26

இதன்மூலம், நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன்  பதக்கப்பட்டியலில் 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com