ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட மதுரை இளைஞர்; முதலமைச்சர் வாழ்த்து!

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட மதுரை இளைஞர்; முதலமைச்சர் வாழ்த்து!
Published on: 
Updated on: 
1 min read

ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக தேர்வாகியுள்ள செல்வபிரபுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆசியாவின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறந்த ஆடவர் தடகள வீரராக மதுரையை சேர்ந்த செல்வபிரபு தேர்வாகியுள்ளார். டிரிப்பிள் ஜம்ப் எனும் நீளம் தாண்டுதல் வீரரான இவரை ஆசிய தடகள கூட்டமைப்பு சிறந்த வீரராக தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை பகிர்ந்துள்ள அவர், ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தோ்வு செய்யப்பட்டுள்ள செல்வ பிரபுவுக்கு வாழ்த்துக்கள் எனவும், மென்மேலும் புதிய சாதனைகளை படைத்து தடகள பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறனுக்கு பாராட்டுகள் எனவும் குறிப்பிட்டுள்ளாா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com