சிக்சரை பறக்கவிட்ட சிஎஸ்கே... தோல்வியை தழுவிய கொல்கத்தா...!!!

சிக்சரை பறக்கவிட்ட சிஎஸ்கே... தோல்வியை தழுவிய கொல்கத்தா...!!!
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வென்று சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

பெங்களூரு அணி:

16-வது சீசன் ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.  இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி அதிரடியாக ஆடி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 189 ரன்களை எடுத்தனா்.  இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய ராஜஸ்தான் அணி இறுதியில் பெங்களுரு அணி 182 ரன்கள் மட்டுமே எடுத்தனா்.  இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. 

சென்னை சூப்பா் கிங்ஸ்:

மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா அணியை சென்னை சூப்பா் கிங்ஸ் அணி எதிா்கொண்டது.  இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வீரா்கள் எதிரணி வீரா்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிக்சருக்கு பறக்க விட்டனர்.  வானில் வா்ணஜாலம் காட்டிய சென்னை அணி இறுதியில் 235 ரன்கள் குவித்தது.  தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.  இதனால் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.  இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை டெல்லி அணி எதிா்கொள்கிறது.  இதில் வெற்றிவாகை சூடப்போவது யாா் என? ரசிகா்கள் ஆவலுடன் உள்ளனா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com