ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின், காலிறுதி ஆட்டம் அஜர்பைஜானின் பாகுவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் செக் குடியரசு மற்றும் டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தின் இறுதியில், டென்மார்க் அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.