விஜய்யின் ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு டோனியின் அசத்தலான நடனம்...! வைரலாகும் வீடியோ!!

விஜய்யின் ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு டோனியின்  அசத்தலான நடனம்...! வைரலாகும் வீடியோ!!

விஜய் படத்தின் பாடலுக்கு தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீசன் 16 ஐபிஎல் போட்டி வரும் 31 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ள நிலையில், அணிகள் ஒவ்வொன்றும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னையில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய்யின் பீஸ்ட பட பாடலுக்கு டோனி உள்ளிட்ட 4 வீரர்கள் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வரும் ’ஜாலியோ ஜிம்கானா’  பாடலுக்கு, டோனி கித்தார் வாசிப்பது போன்றும், அருகில் ருதுராஜ், சிவன் துபே, தீபக் சாஹர் ஆகியோர் நடனமாடுவது போன்றும் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com