இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்திய தோனி ரசிகர்

தோனியின் ரசிகர் ராம் பாபு தனது உடல் முழுவதும் தேசியக் கொடி வண்ணத்தை பூசிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டவாறு பேருந்தை பின் தொடர்ந்து சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்திய தோனி ரசிகர்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகரான ராம் பாபு உடலில் தேசியக் கொடி வண்ணம் பூசிக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டின் பார்படாஸ் நகரில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து இந்திய அணி வீரர்கள் நட்சத்திர விடுதிக்கு சென்றனர். அப்போது தோனியின் ரசிகர் ராம் பாபு தனது உடல் முழுவதும் தேசியக் கொடி வண்ணத்தை பூசிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டவாறு பேருந்தை பின் தொடர்ந்து சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com