டி-20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி தொடரில் இலங்கையை வீழ்த்தி இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற விகிதத்தில் தொடரை இங்கிலாந்து அணி கைபற்றியது.
டி-20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி
Published on
Updated on
1 min read

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி தொடரில் இலங்கையை வீழ்த்தி இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற விகிதத்தில் தொடரை இங்கிலாந்து அணி கைபற்றியது.

உலக டெஸ்ட் டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் டி 20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற விகிதத்தில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 தொடர் கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் போது இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தத்தளித்து வந்த இலங்கை அணி  20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதைத்தொடர்ந்து,களமிறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது.ஆனால், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் முன்னணி வீரர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து அவுட்டாகியதால் 36 ரன்களுக்குள்  4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்தது. இருப்பினும் சாம் பில்லிங்சும், லிவிங்ஸ்டோனும் தாக்குப்பிடித்து நின்றதால் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

அப்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவரில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதனடிப்படையில் இங்கிலாந்து அணி இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற விகிதத்தில் டி 20 தொடரை கைப்பற்றியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com