டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
இறுதி சுற்றுக்கு முன்னேறிய அணிகள்:
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடர் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி, அரையிறுதியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி:
இந்நிலையில், இன்று நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்டத்தில் முதலில் களம் கண்ட பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி:
இதனைத்தொடர்ந்து, 138 ரன்கள் இலக்குடன் இரண்டாவதாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2 வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.