நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுடன், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 32 அணிகள் கொண்ட சுற்றில் கேப் வெர்டேவை எதிர்கொள்ளவிருப்பது உறுதியாகியுள்ளது.
'H' பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்காக, கேப் வெர்டே அணி தனது மூன்றாவது தொடர்ச்சியான ஆட்டத்தை சமன் செய்ததைத் தொடர்ந்து இந்தப் போட்டி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தகுதி பெறுவதற்கான தனது ஏழாவது முயற்சியில், 2026-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிதான் கேப் வெர்டே அணி பங்கேற்கும் முதல் போட்டியாகும். கடந்த வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவுக்கு எதிரான 0-0 என்ற சமநிலையுடன் போட்டியை நிறைவு செய்தது. மூன்று போட்டிகளிலும் கேப் வெர்டே சமன் செய்து, ஸ்பெயினுக்குப் பின்னால் 'H' குழுவில் கேப் வெர்டே இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், ஆடவர் உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய மிகச்சிறிய நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் உள்ள 10 தீவுகளில் பரந்து விரிந்துள்ள, சுமார் 525,000 மக்கள் தொகை கொண்ட ஒரு நாடுதான் கேப் வெர்டே. 1975 வரை போர்த்துகீசிய காலனியாக இருந்தது கேப் வெர்டே. மேலும் அர்ஜென்டினா, அல்ஜீரியா மற்றும் ஆஸ்திரியாவுக்கு எதிரான தனது முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று, 'J' பிரிவில் முன்னதாகவே முதலிடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா அணி, சனிக்கிழமையன்று (நாளை) நடைபெறும் தனது இறுதிக் குழு ஆட்டத்தில் ஜோர்டானை எதிர்கொள்ளவிருக்கிறது.
அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்டே அணிகளுக்கு இடையேயான காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி, இந்திய நேரப்படி ஜூலை 4 ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி தற்போது கிளப் கால்பந்து விளையாடி வரும் நகரமான மியாமியில் உள்ள ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு 2026 FIFA கால்பந்து போட்டியில் கேப் வெர்டே என்ற மிகச்சிறிய நாட்டின் மீதும், இந்த ஆண்டுதான் கடைசியாக மெஸ்ஸி FIFA-வில் விளையாடுவார் என்று கூறுவதாலும் இந்த போட்டி கால்பந்து ரசிகர்களால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.