"அரசியலிலும் கோல் அடித்த FIFA 2026!" மைதானத்தை ஆக்கிரமித்த 'அரசியல் புயல்கள்..' உலகையே திரும்பி பார்க்கவைத்த நிகழ்வுகள்

தாண்டி சில அரசியல் ரீதியிலான நகர்வுகள், உரிமை குரல்கள் எழுப்புவது உள்ளிட்ட விஷயங்கள் நடந்தன.
FIFA World Cup political controversies
FIFA World Cup political controversies
Published on
Updated on
2 min read

FIFA 2026 உலகக்கோப்பை இன்றோடு நிறைவடைகிறது. பல ரசிகர்களும் விண்ணைமுட்டிய டிக்கெட் கட்டணங்களைக் கூட பொருட்படுத்தாமல் நேரில் சென்று பார்த்து உற்சாகமடைந்தனர். இந்திய ரசிகர்கள் நள்ளிரவு போட்டிகளை கூட மிஸ் செய்யாமல் தாங்கள் ஆதரவளிக்கும் அணிக்காக இரவெல்லாம் விழித்திருந்து தொலைக்காட்சியில் பார்த்தனர். ஆனால், இந்த 2026 FIFA உலகக்கோப்பையில் பல அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் நடந்தன என்பது குறிப்பிடத்தகக்கத்து. அதில் முக்கியமான சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

இந்த ஆண்டு FIFA 2026 உலகக்கோப்பையை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்தினர். மேலும் இந்த போட்டியானது ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற்றது. இதில் 48 அணிகள் பங்கேற்றன. உலகெங்கிலும் இருந்து பல நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. அதில் குறிப்பாக பல விஷயங்கள் நடைபெற்ற நிலையில், அரசியல் நிகழ்வுகள் மைதானத்தில் அனுமதிக்கப்படாத ஒன்று. அதாவது, அரசியல் முழக்கங்கள் எழுப்புவது, அரசியல் பதாகைகள் ஏந்துவது போன்ற செயல்களில் பார்வையாளர்கள், போட்டியாளர்கள் யாரும் பங்கேற்கக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், அதனையும் தாண்டி சில அரசியல் ரீதியிலான நகர்வுகள், உரிமை குரல்கள் எழுப்புவது உள்ளிட்ட பல விஷயங்கள் நடந்தன.

இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்கு பாலஸ்தீனம் ஸ்பெயினுக்கு தனது ஆதரவினை அளித்திருந்தது. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரின்போது ஸ்பானிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளும், பார்சிலோனா நட்சத்திர வீரரான லமின் யமால் உட்பட ஸ்பானிய விளையாட்டுப் பிரமுகர்களின் பகிரங்க ஆதரவு வெளிப்பாடுகளின் காரணமாக இந்த முறை அவர்கள் ஸ்பெயினுக்கு தங்களது ஆதரவினை தந்தனர். வான்கூவரில் நடைபெற்ற ஃபிஃபா மாநாட்டின் போது இஸ்ரேலின் கால்பந்து அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்த பாலஸ்தீன கால்பந்து சங்கத் தலைவர் ஜிப்ரில் ரஜூப், "பிபியைப் போன்ற ஒரு குற்றவாளியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருடன் என்னால் கைகுலுக்க முடியாது" என்று கூறினார்.

Spain Palestine support
Spain Palestine support

2025-ஆம் ஆண்டின் ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமர் ஆர்டன் அமெரிக்காவிற்கும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. உலகக் கோப்பைப் போட்டியில் நடுவராகப் பணியாற்றும் தனது நாட்டின் முதல் நபராக ஆகவிருந்த சோமாலிய நடுவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், "அமெரிக்காவின் முடிவில் தங்களால் தலையிட முடியாது" என்று கூறிய உலக கால்பந்து நிர்வாக அமைப்பு, உலகக் கோப்பையிலிருந்து ஆர்டன் நீக்கப்பட்டதை உறுதி செய்தது. இது கால்பந்து ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இது ஒரு இனவெறி தாக்குதல் என்று கட்டமான விமர்சனங்கள் வந்தன.

அமெரிக்காவின் முன்னணி வீரரான ஃபோலரின் பலோகன் மீதான சிவப்பு அட்டைத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு, கால்பந்தின் நிர்வாக அமைப்பான ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோவிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, பெல்ஜியத்திடம் படுதோல்வி அடைந்து அமெரிக்கா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

Falkland Islands dispute
Falkland Islands dispute

இங்கிலாந்துக்கு எதிரான 2-1 என்ற கோல் கணக்கிலான உலகக் கோப்பை அரையிறுதி அர்ஜெண்டினா வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினா அணி வீரர்கள் FIFA விதிகளை மீறும் வகையில், “லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்” (“ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவினுடையது”) என்று பிரகடனப்படுத்தும் அரசியல் பதாகையை ஏந்தி நின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்தது. FIFA 2026 உலகக்கோப்பை உலக அரங்கில் ரசிகர்களாலும், அரசியல் வட்டாரங்களிலும் கூர்ந்து கவனிக்கும் ஒரு நிகழ்வாகவே வரலாறு நெடுக இருந்துள்ளது. அதில் இந்த ஆண்டு சற்று அரசியல் தூக்கலாகவே இருந்தது எனலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com