23 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஹர்பஜன்..!

மற்ற இரு வீரர்கள் யாராக இருப்பர்?
23 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஹர்பஜன்..!
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் ஹர்பஜன் சிங். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன், தற்போது பயிற்சியாளராக ஐபிஎல் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்பஜன் சிங்கிற்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகம். என்னதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடியவர் என்றாலும் கூட, தமிழை கற்பதிலும் தமிழில் ட்வீட் வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டர் என்பதாலேயே அவருக்கு தமிழ்நாடு ரசிகர்கள் அதிகம். 

சற்று காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் பிறகு நடிப்பதில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார். தமிழில் வெப் சீரிஸ்கள், மற்றும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் திரைப்படமும் மக்கள் மனதில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஹர்பஜன் சிங் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1998 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட படம் என்று குறிப்பிட்ட ஹர்பஜன் சிங், சின்ன பசங்களிலிருந்து, பெரிய ஆளுங்கலா மாறிட்டோம் என்று பதிவிட்டு இருந்தார். 

இந்த புகைப்படத்தில் ஹர்பஜன் சிங்கை அடையாளம் காண முடிந்தவர்களால் மற்ற இருவரை அடையாளம் காணமுடியவில்லை. ஹர்பஜன் சிங் வலது பக்கம் நிற்பவர் சென்னை அணிக்காக விளையாடி ரசிகர்களால் பராசக்தி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்ட இம்ரான் தாஹிர். பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் வாய்ப்பு கிடைக்காததால், தென்னாப்ரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதேபோல ஹர்பஜினின் இடதுபுறம் இருப்பவர் ஹசன் ராசா. 1998-ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடரின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை 23 ஆண்டுகளுக்கு பிறகு நினைவு கூர்ந்துள்ளார் ஹர்பஜன். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com