அடேங்கப்பா எவ்வளவு கூட்டம்.. RCB அணியின் கேப்டன் இவர் தாம் போல... இன்று மதியம் அறிவிப்பு!!

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இன்று பிற்பகல் 3.45 மணிக்கு RCB அணியின் புதிய கேப்டன் பற்றிய அறிவிப்பு வெளியாக போகிறது.
அடேங்கப்பா எவ்வளவு கூட்டம்.. RCB அணியின் கேப்டன் இவர் தாம் போல... இன்று மதியம் அறிவிப்பு!!
Published on
Updated on
2 min read

ஐபிஎல் 15-வது தொடர் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அனைத்து அணிகளும் தங்கள் பணிகளை முடித்துவிட்டன. ஆனால் ஆர்சிபி மட்டும் தங்களின் கேப்டன் யார் என்ற அறிவிப்பை வெளியிடாமல் தாமதமாக்கி கொண்டே வருகிறது.

டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் கேப்டன் பதவிக்கான லிஸ்டில் இருந்தனர். இதில் இருந்து அனுபமிக்க ஒருவரை கேப்டனாக எடுக்க தான் நீண்ட ஆலசோனை நடந்து வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டன் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆர்சிபி நிர்வாகம் தொடர்ந்து ட்விஸ்ட் கொடுத்து கொண்டே வருகிறது. அதன் படி, கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி விலகுவதாக கொடுத்த கடிதத்தை இன்னும் ஆர்சிபி நிர்வாகம் ஏற்காமல் உள்ளது என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் RCB வெளியிட்ட விளம்பரப் படங்கள் கோலியின் படத்தைப் போலவே இருந்தன. இதனால் மீண்டும் கோலிதான் கேப்டன் என்ற குஷியில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 3.45 மணிக்கு ஆர்சிபி அணியின் கேப்டன் யார் என்ற அறிவிப்பை நிர்வாகம் வெளியிடுகிறது. பெங்களூரு மியூசியம் சாலையில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com