கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத் அணி...!!

கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத் அணி...!!
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வென்று ஹைதராபாத் அணி வெற்றிவாகை சூடியுள்ளது. 

16-வது சீசன் ஐஎபில் போட்டியில் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியை சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணி எதிா்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வீரா்களின் அதிரடி ஆட்டத்தால் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 228 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமலாய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரா்கள் எதிரணி வீரா்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனா். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை டெல்லி அணியும், லக்னோ அணியை பஞ்சாப் அணியும் எதிா்கொள்கின்றன. இதில் வெற்றி யாா் பக்கம் என்பதை அறிய ரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com