
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த பவர் ஹி்ட்டர்களில் ஒருவர் என்றால் அது மிகையாகாது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை இவர் தன்வசம் வைத்துள்ளார். ரோஹித் ஷர்மா, இதுவரை 637 சிக்ஸர்கள் அடித்து, இரண்டாவது இடத்தில் உள்ள கிறிஸ் கெயிலை விட 84 சிக்ஸர்கள் அதிகமாக அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 93 மற்றும் டி20 போட்டிகளில் 140 என்ற ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ரோஹித் ஷர்மாவிடம், "எந்த பவுலருக்கு எதிராக சிக்ஸர் அடிக்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில், அங்கு கூடியிருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
"எல்லா பவுலர்களும் எனக்குப் பிடித்தமானவர்கள்தான் (I like hitting sixes against every bowler)" என்று ரோஹித் ஷர்மா கூறினார். அவரது இந்தப் பதிலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
"நான் எந்த பவுலருக்கு எதிராக பேட்டிங் செய்தாலும், அவர்களை அடித்து ஆட வேண்டும் என்ற மனநிலையில்தான் செல்வேன். ஒரு குறிப்பிட்ட பவுலருக்கு எதிராக மட்டும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
"எனது எண்ணம் இதுதான், எனக்கு முன்னால் யார் வந்தாலும், நான் சிறப்பாக விளையாட வேண்டும். அவர்களை Pressure-க்கு உட்படுத்த வேண்டும். அவர்களை Pressure ஆக்க எனக்கென்று சில யுக்திகள் உள்ளன. அதையே நான் முயற்சி செய்கிறேன்" என்று ரோஹித் ஷர்மா மேலும் கூறினார்.
ரோஹித் ஷர்மாவின் சமீபத்திய ஆட்டம்:
38 வயதான ரோஹித் ஷர்மா, கடந்த சில மாதங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. கடைசியாக, ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில், 15 போட்டிகளில் 22 சிக்ஸர்கள் அடித்து, 418 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2025 தொடரின்போது, ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்மூலம், இப்போது அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
ரோஹித் ஷர்மாவின் அடுத்த சர்வதேசப் போட்டி, அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் ஓய்வு மற்றும் ஷுப்மன் கில்லின் வளர்ச்சி காரணமாக, 2027 உலகக் கோப்பைக்கான ஒருநாள் அணியில் ரோஹித் ஷர்மாவின் இடம் உறுதி என்று சொல்ல முடியாது என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.