இந்தியாவிலிருந்து ஓமனுக்கு இடம்பெயர்கிறது உலகக்கோப்பை டி-20 போட்டி,..அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி.! 

இந்தியாவிலிருந்து ஓமனுக்கு இடம்பெயர்கிறது உலகக்கோப்பை டி-20 போட்டி,..அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐசிசி.! 
Published on: 
Updated on: 
1 min read

டி-20 உலகக்கோப்பை  அக்டோபர் 17 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.  

இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை இந்தியாவில் நடத்த முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்போது இந்தியாவில் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்ததது. இந்த தகவலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் உறுதிப் படுத்தினார்.

இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 14 தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  டி-20 உலகக்கோப்பை நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com