
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலீசை முந்தினார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி விராட் கோலிக்கு 500 ஆவது சர்வதேச போட்டியாகும்.
இந்த போட்டியில் 87 ரன்கள் எடுத்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எடுத்த ரன்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 548 ஆக உயர்ந்தது.
இதன் மூலம், 25 ஆயிரத்து 534 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த ஜாக் கல்லீஸை பின்னுக்குத் தள்ளி, விராட் கோலி ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிக்க | இந்தியாவில் "ஆப்பிள் பே"... எப்பொழுது செயல்பாட்டிற்கு வரும்?