IND vs SL: தடுமாறும் பவுலர்கள், தாக்கும் தீவு வீரர்கள் - ரசிகர்கள் எழுப்பும் கேள்விகள் என்ன?

இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையைத் தொடங்கவே 110 ரன்களை விட்டுக்கொடுத்தனர். அதுவும் 20 ஓவருக்குள். அதுவும் ஒரு ரன் அவுட்.
IND vs SL: இந்திய பந்துவீச்சு மீது 1000 கேள்விகள் - கவலையில் ரசிகர்கள்!
IND vs SL: இந்திய பந்துவீச்சு மீது 1000 கேள்விகள் - கவலையில் ரசிகர்கள்!
Published on
Updated on
2 min read

இங்கிலாந்தில் படுதோல்வி அடைந்த பிறகு, இந்திய அணி பங்கேற்கும் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், கம்பேக் கொடுக்க வேண்டிய இந்திய அணியின் பவுலிங் ஸ்குவாட் கவலைக்கிடமாக உள்ளது என்பதையே பயிற்சி ஆட்டங்கள் காட்டியிருக்கின்றன.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு நாட்களும் இரு அணிகளும் தலா 90 ஓவர்கள் பேட்டிங் செய்வார்கள். மூன்றாவது நாளில் தலா 45 ஓவர்கள் பேட்டிங் செய்வார்கள்.

Team India
Team India

இதன்படி, முதல் நாள் பேட்டிங் செய்த இலங்கையின் புதிய தலைமுறை பேட்டர்கள், ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் இறுக்கிப் பிடிக்க, இலங்கை அணி 363-8 என்ற கணக்கில் முதல் நாளை முடித்துக்கொண்டது.

இந்த நாளின் முடிவில் கேப்டன் கில்லும், பயிற்சியாளர் கம்பீரும் கூடி பேசுவதற்கு நிறைய விஷயங்களும், கவலைகளும் இருந்திருக்கும். ஏனென்றால், இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையைத் தொடங்குவதற்குள் 110 ரன்களை விட்டுக்கொடுத்தனர். அதுவும் 20 ஓவர்களுக்குள். அதிலும் ஒரு ரன் அவுட்.

எதிர்பார்த்தபடியே, நீண்ட நாட்களுக்குப் பிறகு சிகப்பு பந்து போட்டியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாற்றத்துடன் காணப்பட்டனர். சிராஜும், பிரசித் கிருஷ்ணாவும் திணற, குர்னூர் பிரார் மட்டும் ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார்.

குல்தீப் தலைமையில் வரும் சுழற்பந்து வீச்சாளர்கள் படை விக்கெட்டுகளைக் கைப்பற்றியது என்றாலும், சிறப்பாகச் செயல்பட்டது எனக் கூற முடியாததற்கும் காரணங்கள் உள்ளன. குறிப்பாக, ஆஃப் ஸ்பின்னர் சரன்ஷ் ஜெயின் இந்தப் போட்டியில் நீடிப்பது கடினமாக இருக்கும்.

Team India
Team India

குல்தீப் (18 ஓவர்களில் 76 ரன்களுக்கு 2 விக்கெட்) மற்றும் மானவ் சுதார் (11 ஓவர்களில் 30 ரன்களுக்கு 1 விக்கெட்) இருவரும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். 11 ஓவர்கள் வீசிய சரன்ஷ் ஜெயின், 54 ரன்களை விட்டுக்கொடுத்தும் ஒரு விக்கெட்டைக்கூட எடுக்கவில்லை.

அனுபவமிக்க வீரரான குல்தீப் யாதவ், முதல் 5 ஓவர்களில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், அடுத்த கட்டத்தில் பந்தின் வேகத்தில் வேரியேஷன் காட்டி 2 பேட்டர்களை பெவிலியனுக்கு அனுப்பினார்.

15 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தாலும், ஜடேஜா 64 ரன்களை விட்டுக்கொடுத்திருப்பது யோசிக்க வைத்திருக்கிறது.

மறுபக்கம், இலங்கையின் இளம் பேட்டர்கள் நேற்றைய நாளைத் திறம்படத் தங்களதாக்கிக் கொண்டனர் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

குறிப்பாக, இந்திய வேகப்பந்துவீச்சாளர்களான சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவை எதிர்கொண்ட நிஷான் ஃபெர்னாண்டோ, 65 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார்.

சர்வதேச போட்டிகளில் பும்ரா இல்லாமல் விளையாட இந்திய அணி இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் நேற்றைய ஆட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. சிராஜ் ஒரு புத்திசாலியான பந்துவீச்சாளராக இருந்தாலும், போட்டியின் மொத்த சுமையையும் தூக்கும் அளவுக்கு அவரது தோள்கள் வலுவானதா என்பது கேள்விக்குறிதான்.

தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பவுலருடன் இணைந்து பந்துவீசுவதற்கும், 51-வது இடத்தில் இருக்கும் பவுலருடன் இணைந்து பந்துவீசுவதற்கும் உள்ள வித்தியாசம் சிராஜின் ஃபார்மில் வெளிப்படுகிறது.

பிரசித் கிருஷ்ணாவுக்கு லெங்க்த் பந்துகளை வீசுவதில் இருக்கும் தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவரது ஷார்ட் பால்கள் ரன்களை அள்ளிக் கொடுத்திருக்கின்றன. பார்ட்னர்ஷிப்பை உடைப்பது, ரன்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கு இடையில் சரியான முடிவுகளை எடுப்பதில் தடுமாறினார்.

அணியில் உள்ள ஆகாஷ் தீப், பிளேயிங் 11-ல் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உலகக் கோப்பையை மனதில் வைத்து, அனுபவமிக்க வீரர்களான ஷமி அல்லது புவனேஸ்வர் குமாரைப் பயன்படுத்த மறுக்கும் பிசிசிஐ-யின் முடிவுக்கு கொடுக்கப்படும் விலை என்ன என்பது இந்தப் போட்டியின் முடிவில் தெரியவரும்.

IND vs SL: இந்திய பந்துவீச்சு மீது 1000 கேள்விகள் - கவலையில் ரசிகர்கள்!
இலங்கை தொடருக்கு முன் ரசிகர்களுக்கு நிம்மதி! பயிற்சி ஆட்டத்தை தவிர்த்த சுப்மன் கில்.. முதல் டெஸ்டில் களமிறங்குவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com