என்னது.. புதுச்சேரியில இந்தியா - ஆஸ்திரேலியா இப்போ LIVE மேட்ச் நடந்துகிட்டு இருக்கா? என்னங்க சொல்றீங்க!?

இரண்டாவது நாளான இன்று பேட்டிங் செய்துவரும் இந்திய அணி, 39 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்துள்ளது. ஆயுஷ் பாண்டே மற்றும் சாய் சுதர்சன் முறையே 4, 8 ரன்கள் அடித்து சொற்பமாக விக்கெட்டை இழந்துள்ளனர்.
IND A vs AUS A
என்னது.. புதுச்சேரியில இந்தியா - ஆஸ்திரேலியா இப்போ LIVE மேட்ச் நடந்துகிட்டு இருக்கா? என்னங்க சொல்றீங்க!?x.com/CApondicherry
Published on: 
Updated on: 
2 min read

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறும் நிலையில், மீண்டும் விராட் - ரோஹித் ஆட்டத்தைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

சீனியர்களுக்கான 'ஹைப்' ஒருபுறம் இருக்க, சைலண்டாக புதுச்சேரி  கிரிக்கெட் சங்கம், சீசெம் மைதானத்தில் இந்தியா A அணி ஆஸ்திரேலியா A அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இந்தியா A அணியை தேவ்தத் படிக்கல் வழிநடத்துகிறார். அணியில் ஆயுஷ் பாண்டே, சாய் சுதர்சன், ஷேக் ரஷீத், யாஷ் ரத்தோட், குமார் குஷாக்ரா (WK), தனுஷ் கோட்யான், ஷம்ஸ் முலானி, அன்ஷுல் கம்போஜ், துஷார் தேஷ்பாண்டே, நச்சிகேத் பூடே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

TOSS
TOSS

நேற்றைய தினம் தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. அதிகபட்சமாக சாம் ஹார்பர் 128 ரன்கள் அடித்திருந்தார்.

இரண்டாவது நாளான இன்று பேட்டிங் செய்துவரும் இந்திய அணி, 39 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்துள்ளது. ஆயுஷ் பாண்டே மற்றும் சாய் சுதர்சன் முறையே 4, 8 ரன்கள் அடித்து சொற்பமாக விக்கெட்டை இழந்துள்ளனர்.

சாய் சுதர்சன், ஷேக் ரஷீத் விளையாடி வருகிறது. சாய் சுதர்சன் தற்போதைய நிலவரப்படி 52 பந்துகளுக்கு 29 ரன்கள் அடித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியில் சாம் கான்ஸ்டாஸ், ஜோஷ் பிலிப், நாதன் மெக்ஸ்வீனி (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜேசன் சங்கா, லியாம் ஸ்காட் (விக்கெட் கீப்பர்), சாம் ஹார்பர், டாட் மர்பி, ஜை ரிச்சர்ட்சன், கோரி ரோச்சிக்கியோலி, லியாம் ஹட்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம்.

இந்த டெஸ்ட் போட்டி அக்டோபார் 2 ம் தேதி முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 6, 9 மற்றும் 12 தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அனைத்துப் போட்டிகளும் புதுச்சேரி மைதானத்திலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

IND A vs AUS A
“சச்சினுக்கு இணையாக Virat வர வேண்டுமா?” அஸ்வின் வைத்த முக்கிய நிபந்தனை

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com