வங்கதேசத்திடம் மோசமாக தோற்ற இந்திய கிரிக்கெட் அணி.. சத்தம் இல்லாமல் நடந்த "சம்பவம்" - இப்படியொரு மேட்ச் நடந்ததே தெரியலையே!

இந்திய நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர், கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, மொயீன் அலி போன்ற பல ஜாம்போவான்கள் விளையாடி வருகின்றனர்.
India Champions Suffer Shock Defeat to Bangladesh in World Championship of Legends WCL 2026
வங்கதேசத்திடம் மோசமாக தோற்ற இந்திய கிரிக்கெட் அணி.. சத்தம் இல்லாமல் நடந்த "சம்பவம்" - இப்படியொரு மேட்ச் நடந்ததே தெரியலையே!
Published on: 
Updated on: 
2 min read

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட் (World Championship of Legends - WCL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிறு அன்று இந்தியா சாம்பியன்ஸ் அணிக்குக் வங்காளதேசம் சாம்பியன்ஸ் அணிக்கும் இடையிலான லீக் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

வங்கதேச ஓபனர், ரோனி தலுக்தார் 25 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை அடித்தார். இதுதான் ஆட்டத்திலேயே ஒரு பேட்ஸ் மேன் அடித்த அதிகபட்ச ரன்கள். அதன்பிறகு மிடில் வரிசை பேட்டர்கள் நஷிர் ஹோசைன் 24 (21), அராபட் சன்னி 37 (38) ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனார்.

20 ஓவர் முடிவில் வங்க தேசம் அணி 9 விக்கெட் 141 ரன்கள் குவித்தது.

இந்தியா பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரிஷி தவான் மற்றும் பவான் நெகி தலா இரண்டு விக்கெட்டுகளும் மோஹித் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

INDCH
INDCH

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டர்கள் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார் ராயுடு.

அடுத்ததாக இறங்கிய ஸ்டூவரிட் பின்னி 7 பந்துகளில் 15 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் யுவராஜ் சிங் டக் அவுட் ஆனார்.

ராபின் உத்தப்பா, யூசுப் பதான், அடுத்தடுத்து விக்கெட் இழக்க ரிஷி தவான் - இர்ஃபான் பதான் கூட்டணி மிடில் ஓவர்களில் களத்தில் நின்றது. ஆனாலும் தேவையான ரன்களை சேர்க்க முடியவில்லை. அவர்களும் எனமுல் ஹக் ஜூனியர் பந்தில் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இறுதியில் 20 ஓவர் முடிவுக்கு 138 ரன்களை மட்டுமே எட்டி வெற்றியைத் தவரவிட்டது இந்திய அணி.

World Championship of Legends

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட் தொடரில் இந்தியா சாம்பியன்ஸ், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் மற்றும் வங்கதேசம் சாம்பியன்ஸ் ஆகிய 6 அணிகள் போட்டியிடுகின்றன.

இந்திய நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர், கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, மொயீன் அலி போன்ற பல ஜாம்போவான்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் விளையாடியுள்ள இந்திய அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணியளவில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், யூசுப் பதான், மோஹித் சர்மா, பியூஷ் சாவ்லா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் கிறிஸ் கெயில், பிராவோ உள்ளிட்ட மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திரங்களும் ஒன்றாக விளையாடுவதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவொரு அறிய வாய்ப்பு!

India Champions Suffer Shock Defeat to Bangladesh in World Championship of Legends WCL 2026
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்... யுவராஜ், கம்பீர் விஷயத்தில் முன்னாள் தேர்வாளர் வெளியிட்ட ரகசியம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com