இந்தியா - நியூசிலாந்து இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (அக்டோபர் 22), கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் பந்துவீசும் புவனேஷ்வர் குமார், சிறப்பாகத் தொடங்கினார். பந்தை நன்றாக ஸ்விங் செய்து 4 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார். ஆனால், அவரது இரண்டாவது ஓவரில் டிம் சீஃபர்ட், இரண்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்து, அந்த ஓவரில் 17 ரன்கள் எடுத்தார்.
தங்கள் சொந்த மைதானத்தில் நியூசிலாந்து பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிம் சீஃபர்ட் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், 5 ஓவர்களில் 49 ரன்கள் என்ற வலுவான தொடக்கத்தைப் பெற்றிருந்தது நியூசிலாந்து.
சீரான இடைவெளியில் ஃபின் ஆலன், மிட்செல் என வீரர்கள் ஆட்டமிழந்தாலும், நியூசிலாந்து பேட்டர்கள் 170+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன்களைக் குவித்தனர்.
அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
எல்லா பந்துவீச்சாளர்களும் சுமாரான ரிசல்ட்டையே கொடுத்தனர். மயங்க் யாதவ் சரியான நேரத்தில் டிம் சீஃபர்ட் விக்கெட்டை வீழ்த்தினாலும், ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகபட்சமாக அக்சர் படேல் 51 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
3 ஆல்-ரவுண்டர்களுடன் களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், இறுதிவரை நமன் திரை பயன்படுத்தவில்லை. வழக்கமாக விக்கெட் எடுக்க 1, 2 ஓவர்கள் வீசும் அபிஷேக் சர்மாவும் பயன்படுத்தப்படவில்லை.
நமன் திர் பந்துவீசவில்லை என்றால், அவருக்குப் பதிலாக சூர்யவன்ஷியை அணியில் சேர்த்திருக்கலாமே எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவருமே பென்சில் உள்ளனர். உலகத்தரமான ஸ்பின்னர்களை அணியில் சேர்க்காமல் 225 ரன்கள் விட்டுக்கொடுத்ததற்காக வருத்தப்பட முடியாது? பெரிய இலக்குடன் களமிறங்குபவர்கள் பேட்டிங்கில் ஏதாவது பிளான் வைத்திருக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.