``ஒரு மேட்ச் கூட ஜெயிக்கலையா?" பாகிஸ்தான் மட்டுமில்லை.. UAE, இங்கிலாந்திடமும் அடி வாங்கிய 'இந்திய அணி'! ஹாங்காங் சிக்ஸெஸில் என்னதான் நடக்குது?

ஒரு இன்னிங்ஸில் 6 ஓவர்கள், ஒரு அணியில் 6 வீரர்கள் என்று நடைபெறுகிறது இந்த போட்டி. கிரிக்கெட்டில் உலக அளவில் செல்வாக்கு செலுத்தும் இந்தியா இத்தனை மோசமாக தோற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹாங்காங் சிக்ஸெஸ் தொடரில் இந்திய கேப்டன் க்ருணால் பாண்டியா
இந்தியா vs பாகிஸ்தான் https://x.com/CricketHK
Published on: 
Updated on: 
3 min read

ஒரு பக்கம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வர, நேற்று (அக்டோபர் 30) தொடங்கி நாளை (நவம்பர் 1) முடியும் ஹாங்காங் சிக்ஸெஸ் போட்டியில் பலத்த அடி வாங்கியிருக்கிறது இந்திய அணி.

நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததுடன், இன்று யுஏஇ மற்றும் இங்கிலாந்திடமும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

ஐசிசியின் சர்வதேச ரான்கிங்கில் ஒரு நாள் போட்டிகளில் முதலிடத்திலும், டி20-ல் இரண்டாம் இடத்திலும், டெஸ்டில் நான்காவது இடத்திலும் உள்ள இந்திய அணி, இந்த தொடரில் இத்தனை மோசமான தோல்விகளை சந்திக்க காரணம் என்ன என்பதை ஆராயும் முன் ஹாங்காங் சிக்ஸெஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஒரு ஓவருக்கு 6 பந்துகள், ஒரு இன்னிங்ஸில் 6 ஓவர்கள், ஒரு அணியில் 6 வீரர்கள் என்று நடைபெறுகிறது இந்த போட்டி. இது ஐசிசியால் அங்கீகரிக்கப்படாத கண்காட்சி போட்டியாகும். சீனாவின் ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஹாங்காங் சிக்ஸெஸ் தொடரில் இந்திய வீரர் நடராஜன்
ஹாங்காங் சிக்ஸெஸ் தொடரில் இந்திய வீரர் நடராஜன் https://x.com/CricketHK

1992ல் இந்த தொடர் தொடங்கக்கப்பட்டபோது 9 அணிகள் பங்கேற்றன. இப்போது 12 அணிகள், 4 குழுக்களாக பங்கேற்கின்றன.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஸ்காட்லேண்ட், யுஏஇ, ஓமன் ஆகிய நாடுகள் போட்டியில் கலந்துகொண்டன.

இந்தியாவின் C குழுவில் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெற்றன. இரண்டு நாடுகளிடமும் இந்தியா தோல்வியடைந்தது. இதேப்போல ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங்கிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து பவுல் கோப்பைக்கான அரையிறுதியி போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்தது.

இந்த போட்டியைப் பொறுத்தவரையில் குழு போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் 4 அணிகள் 'கப்'புக்காகவும் (Cup), இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் 'பிளேட்டு'க்காகவும் (Plate), 3வது இடம் பிடிக்கும் அணிகள் 'பவுலு'க்காகவும் (Bowl) விளையாடும்.

ஹாங்காங் சிக்ஸெஸ் தொடரில் இந்திய கேப்டன் க்ருணால் பாண்டியா
இந்திய கேப்டன் க்ருணால் பாண்டியா https://x.com/CricketHK

இந்த மூன்றையும் வெற்றி பெரும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய அணி, நாளை 11-12வது இடத்துக்கான போட்டியில் வங்காள தேசம் அணியை எதிர்கொள்கிறது.

ஒட்டுமொத்த தொடரிலும் ஒரு போட்டியைக் கூட வெல்ல முடியவில்லை என்ற அவப் பெயரைக் களையவும், கடைசி இடத்தில் நிறைவுபெறாமல் இருக்கவும் நாளைய போட்டியை வெல்வது அவசியம். ஆனால் இந்த தொடரில் சின்ன சின்ன அணிகளை வெற்றி பெறுவது கூட இந்தியாவுக்கு சவாலாக இருப்பது ஏன்? அணித் தேர்வில் இருந்தே பிரச்சனை இருப்பதாகக் கருதுகின்றனர்.

இந்திய அணிக்கு பலத்த தோல்வி ஏன்?

க்ருணால் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ராகுல் தெவாடியா, ஷஷாங்க் சிங், நடராஜன், குல்வந்த் கேஜ்ரோலியா ஆகியோர் இடம் பெற்றனர். மொத்தம் 6 வீரர்கள், ஒரு ரன்னர்.

ஹாங்காங் சிக்ஸெஸ் தொடரில் இந்திய வீரர்கள்
இந்திய பேட்ஸ்மேன்கள் https://x.com/CricketHK

ஐந்து விக்கெட் விழுந்தாலும் கடைசியாக இருக்கும் வீரர் ஸ்ட்ரைக்கில் இருந்து ரன்னர் உடன் விளையாட முடியும். ஆம் தெருவில் விளையாடும் கிரிக்கெட் போலதான்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் செயல்பாடே தோல்விக்கு காரணமாகக் கூறப்பட்டது. குறிப்பாக நிதிஷ் ராணா 2 ஃப்ரீஹிட் பந்துகளைத் தவறவிட்டது அதிகம் விமர்சிக்கப்பட்டது.

மைதானம் முழுவதும் 4 ஃபீல்டர்கள்தான் என்பதனால் அதிக ரன்கள் எடுப்பது சுலபமான ஒன்று. ஆனால் டாட் பால்களை மட்டும் முடிந்தவரைக் குறைக்க வேண்டும்.

இந்திய ஓப்பனர்களோ அனைத்து பந்துகளையும் ரன்களாக மாற்றத் தவறினர். நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ராகுல் தெவாடியா பந்துகளை எதிர்கொள்வதில் திணறினர். ஒட்டுமொத்த தொடரிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் ராகுல் திரிபாதி ஒரு அரை சதம் (56) அடித்தார்.

ஹாங்காங் சிக்ஸெஸ் தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
இந்தியா vs பாகிஸ்தான் https://x.com/CricketHK

பாகிஸ்தானுக்கு எதிராக ஷஷாங்க் சிங் 11 பந்துகளில் 40 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்தார். யுஏஇக்கு எதிராக நடராஜன் 14 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். ஆனால் 2,3 பேட்ஸ்மேன்கள் நல்ல பங்களிப்பை வழங்கிய போட்டி என்று எதுவுமே இல்லை.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அணியில் இடம்பெற்றுள்ள விக்கெட் கீப்பரைத் தவிர அனைத்து வீரர்களும் தலா ஒரு ஓவர் வீச வேண்டும். ஒருவர் மட்டும் 2 ஓவர் வீசலாம்.

ஒருமுறை கூட எதிரணியை இந்தியா ஆல் அவுட் செய்யவில்லை. 2 விக்கெட்டுக்கு மேல் எடுக்கவில்லை. யுஏஇ போட்டியில் விக்கெட்டே எடுக்கவில்லை. நடராஜன், க்ருணால் பாண்டியா போடுவாதற்கும் ராகுல் திரிபாதி, நீதீஷ் குமார் போடுவதற்கும் வேறுபாடே இல்லை எனும் அளவுக்கு ரன்கள் சென்றது.

இந்திய அணி ஹாங்காங் சிக்ஸெஸில் திணறுவது புதியது அல்ல.

இதுவரை 2005ம் ஆண்டு ஒருமுறை மட்டுமே இந்தியா தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் 6 முறை வென்றுள்ளது. 1992 முதல் பாகிஸ்தானை நேருக்கு நேராக எதிர்கொண்ட போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த தோல்வி வரலாற்றுப்பூர்வமான நீட்சிதான் என்றாலும், உலக அளவில் கிரிக்கெட்டில் அதிக செல்வாக்கு உள்ள நாடாக இருக்கும் இந்தியா இத்தனை மோசமாக தோற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹாங்காங் சிக்ஸெஸ் தொடரில் இந்திய கேப்டன் க்ருணால் பாண்டியா
'க்ளென் பிலிப்ஸிடம்' சரணடைந்த பௌலர்கள்! படுதோல்வியடைந்த இந்திய அணி.. அபிஷேக், ஷ்ரேயாஸ், நமன்.. யாராலும் காப்பாற்ற முடியவில்லை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.