

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான T -20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா -வின் மெல்போர்ன் -ல் நடந்துகொண்டிருக்கிறது. டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்த இரண்டாவது டி20 போட்டியில், இந்தியா முதலாவது ஐந்து ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
கப்டன் சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அனைவரும் அவுட் ஆகி டக்அவுட் திரும்பினர். 5 ஓவர்கள் முடிவில் இந்தியா 33/4 என்ற நிலைமையில் உள்ளது. அபிஷேக் சர்மா மற்றும் அக்சர் படேல் மைதானத்தில் விளையாடினர்.
தொடர் வெற்றியை விடவும், வரும் 2026 பிப்ரவரியில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, இரு அணிகளும் தங்களது அணியின் பலங்களைச் சோதிப்பதையே முக்கியமாகக் கவனிக்கின்றன.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய வழக்கமான பேட்டிங் இடத்தை விட்டுக்கொடுத்து, சஞ்சு சாம்சனை 3-வது இடத்தில் அனுப்பினார். ஆனால் அந்த முடிவும் பலன் அளிக்கவில்லை. சாம்சனும் சூர்யகுமாரும் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை பிடித்து இந்தியாவின் டாப் ஆர்டரை சிதைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா 2 பந்துகளில் கேட்ச் அவுட் ஆனதுமே மைதானத்தில் அமைதி நிலவியது. அண்மையில் நடந்த ஆசிய கோப்பையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சென்று இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டதும் இவரே. தற்போது 69 பந்துகளில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து நிற்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
