தொடரைக் கைப்பற்றிய இந்தியா....தரவரிசையில் முதலிடம்!!!

தொடரைக் கைப்பற்றிய இந்தியா....தரவரிசையில் முதலிடம்!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து:

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இந்திய அணி:

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி  50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது.  அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 81 பந்துகளில் 101 ரன்களும், சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களும் குவித்தனர். 

நியூசிலாந்து அணி:

தொடர்ந்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்நிலையில், நியூசிலாந்து அணி 41க்கு 2 ஓவர்களில் 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

தரவரிசை:

இதனால் தரவரிசையில் இந்தியா 114 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com