ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஆண்டுகள் விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சின் பெயர் மட்டுமே இருக்கிறது. இவர் மொத்தம் 22 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி மூலம், மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் 22-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, சச்சின் சாதனையை தொட்டுள்ளார்.