ஒவ்வொரு மேட்சிலும்.. வித விதமாக அசிங்கப்பட்டு தோற்கும் CSK - அடக் கடவுளே!

விஜய் ஷங்கரும் தோனியும் intent இல்லாம ஆடினது ஒரு crime! CSK-யோட fighting spirit எங்க போச்சு?” இந்த மேட்ச் CSK-யோட lack of aggression-ய ரொம்ப expose பண்ணிடுச்சு.
Chennai super kings
Chennai super kings Admin
Published on
Updated on
2 min read

என்னனு சொல்றது.. மேட்ச் தோத்தா பரவால்ல.. ஒவ்வொரு மேட்சும் டிசைன் டிஸைனா தோத்தா என்ன பண்றது? சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு 2025 IPL சீசன் ஒரு heartbreak சீசனா மாறியிருக்கு. முதல் மேட்ச்ல மும்பை இந்தியன்ஸை (MI) வீழ்த்தி, “இது நம்ம சீசன்”னு ஒரு hope கொடுத்த CSK, அதுக்கப்புறம் ஒரு மேட்ச் கூட வெல்ல முடியாம, ஒவ்வொரு மேட்ச்லயும் விதவிதமா தோல்விய அடைஞ்சு, ரசிகர்களோட நம்பிக்கைய உடைச்சு வச்சிருக்கு.

RCB மேட்ச் - 17 வருஷ Pride காலி!

மார்ச் 28-ல சேப்பாக்-ல நடந்த மேட்ச்ல, RCB 50 ரன்ஸ் வித்தியாசத்துல CSK-ய வெச்சு செய்ய, 17 வருஷமா (2008 முதல்) சேப்பாக்-ல RCB-க்கு எதிரா தோற்காத ஒரு record அன்றோட காலி. RCB 197 ரன்ஸ் டார்கெட் செட் பண்ணுச்சு—CSK 146 ரன்ஸ்க்கு all out ஆகிடுச்சு.

இந்த மேட்ச்ல முக்கியமா ஒரு controversy உருவாச்சு—தோனியோட பேட்டிங் ஆர்டர். 13வது ஓவர்லயே CSK-யோட முக்கிய பேட்ஸ்மேன் ஷிவம் துபே ஆட்டமிழந்தப்போ, ரசிகர்கள் எல்லாம் “தோனி இப்போ வருவாரு”னு எதிர்பார்த்தாங்க. ஆனா, அஸ்வினுக்கு முன்னாடி தோனி வரல—9வது இடத்துல பேட்டிங்குக்கு வந்தது ஒரு shocker. அப்போவே CSK மேட்ச் almost தோத்த நிலைமைல இருந்துச்சு—தோனி வந்து 2 சிக்ஸர்கள் அடிச்சாலும், மேட்ச் out of reach ஆகிடுச்சு.

“தோனி ஏன் இவ்ளோ லேட் ஆஃப்டர் அஸ்வின்? இது CSK-யோட strategy இல்ல, தோனி fan moment-க்காக மட்டும் வந்த மாதிரி இருக்கு!"-னு ரசிகர்கள் புலம்ப, தோனி மேல ஒரு huge criticism வந்துச்சு—குறிப்பா CSK-யோட loyal fans கூட இதை ஏத்துக்க முடியாம புலம்புனாங்க.

RR மேட்ச் - 6 ரன்ஸ் வித்தியாசத்துல தோல்வி!

அடுத்த மேட்ச்ல ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) எதிரா CSK 6 ரன்ஸ் வித்தியாசத்துல தோல்விய அடைஞ்சு, மறுபடியும் ஒரு disappointment கொடுத்துச்சு. 180 ரன்ஸ் டார்கெட் செட் பண்ண RR, CSK-ய 174 ரன்ஸ்க்கு stop பண்ணிடுச்சு. CSK-யோட middle order collapse ஆனது ஒரு பக்கம் இருக்க, death overs-ல strike rotation சரியில்ல—required run rate 12-ல இருந்து 18 ஆகிடுச்சு. “CSK-யோட batting approach ஒரு plan இல்லாம இருக்கு. Intent காட்டறதுக்கு பதிலா, defensive ஆட்டம் ஆடி தோத்துடுச்சு.”

நோ Intent

டெல்லி கேபிடல்ஸ் (DC) எதிரான மேட்ச்ல, CSK மறுபடியும் ஒரு pathetic பர்ஃபார்மன்ஸ் காட்டுச்சு. 184 ரன்ஸ் டார்கெட் செட் பண்ண DC, CSK-ய 158 ரன்ஸ்க்கு restrict பண்ணிடுச்சு. இந்த மேட்ச்ல விஜய் ஷங்கரும் தோனியும் கடைசி வரைக்கும் பேட்டிங் பண்ணினாலும், intent காட்டாம, strike rate 100-க்கு கீழயே வைச்சு ஆடுனது ஒரு big let-down. Death overs-ல 36 ரன்ஸ் தேவைப்பட்டப்போ, இவங்க ரெண்டு பேரும் boundaries அடிக்க முயற்சி கூட பண்ணல—dot balls அதிகமாகிடுச்சு, மேட்ச் கைவிட்டு போயிடுச்சு.

"விஜய் ஷங்கரும் தோனியும் intent இல்லாம ஆடினது ஒரு crime! CSK-யோட fighting spirit எங்க போச்சு?” இந்த மேட்ச் CSK-யோட lack of aggression-ய ரொம்ப expose பண்ணிடுச்சு.

ஒரு Golden Opportunity வீணாக்குனது!

நேத்து நடந்த பஞ்சாப் கிங்ஸ் (PBKS) எதிரான மேட்ச், CSK-க்கு ஒரு golden opportunity இருந்தாலும், அதையும் miss பண்ணிடுச்சு. பஞ்சாப் முதல்ல பேட்டிங் பண்ணும்போது, 10 ஓவர்லயே 5 விக்கெட்ஸ் விழுந்து, 78/5-ல இருந்துச்சு—CSK இங்க ஒரு strong grip வச்சு, பஞ்சாபை 150 ரன்ஸ்க்கு restrict பண்ணியிருக்கலாம்.

ஆனா, CSK-யோட bowling strategy ஒரு mess-ஆ இருந்துச்சு—field placement சரியில்ல, short balls கொடுத்து, ஒரு இளம் பிளேயர் பிரின்யான்ஷி ஒரு massive century (112 ரன்ஸ்) அடிக்க விட்டுடுச்சு. அவருக்கு முதல் ஓவர்லயே சிஎஸ்கே கேட்ச் விட்டது தனிக்கதை.

பஞ்சாப் 220 ரன்ஸ் செட் பண்ண, 201 ரன்கள் வரை சென்று தோற்றது சென்னை. இதுக்கு முன்னாடி நடந்த மேட்சுக்கு இது எவ்வளவோ பரவால்ல என்றாலும், கையில் கிடைத்த அருமையான வாய்ப்பே விட்டுட்டு, இப்போ தொடர்ந்து நான்கு போட்டிகள்ல தோற்று, கடைசி இடத்துக்கு போராடிக்கிட்டு இருக்கு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com