'கேட்ச்சை' மிஸ் பண்ணா பரவாயில்லை, 'ரன் அவுட்டையா' மிஸ் பண்ணுவீங்க?!: சுப்மன் கில்லின் சொதப்பலை பார்த்து ஆடிப் போன ரவி சாஸ்திரி!

ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தின்போது, மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்...
shubman ghill
shubman ghill
Published on
Updated on
2 min read

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்றது. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், இந்தப் போட்டி சம்பிரதாயத்துக்காக நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணிக்கு ஒரு ஆரம்பகட்ட விக்கெட் தேவையிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸின் போது ஒரு முக்கியமான ரன்-அவுட் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள இளம் வீரர் சுப்மன் கில், மிகவும் எளிதான அந்த ரன்-அவுட் வாய்ப்பைத் தவறவிட்டார். இந்தச் சம்பவம், வர்ணனையாளர் பெட்டியில் இருந்த இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது.

தவறவிடப்பட்ட ரன்-அவுட் வாய்ப்பு

ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தின்போது, மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது, மிட்செல் மார்ஷ் ஒரு ஷாட் அடித்தபோது, இருவருக்கும் இடையே ரன் ஓடுவதில் பெரிய குழப்பம் (Mix-up) ஏற்பட்டது. இதனால், மேத்யூ ஷார்ட், ஓடி வந்த வழியில் பாதியிலேயே நிற்க நேரிட்டது.

இதற்குள் பந்து, ஃபீல்டிங்கில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் சென்றது. பந்து கில்லிடம் வந்தபோது, பேட்ஸ்மேன் மேத்யூ ஷார்ட் ஓடிவந்த 'நான்-ஸ்ட்ரைக்கர்' முனையில் இருந்த ஸ்டம்பை நோக்கித்தான் அவர் பந்தை எறிய வேண்டும். ஷார்ட் ஸ்டம்பை விட்டு வெகுதூரம் வந்து விட்டதால், ஸ்டம்பை நோக்கி அவர் பந்தை எறிய அதிக நேரம் (Ample Time) இருந்தது. ஆனால், கில் குறி தவறி எறிந்ததால், பந்து ஸ்டம்பில் படாமல் மேத்யூ ஷார்ட் தப்பிவிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஷார்ட், மீண்டும் தனது கிரீசுக்குத் திரும்பிவிட்டார்.

இந்த எளிதான ரன்-அவுட் வாய்ப்பை கில் தவறவிட்டதைக் கண்ட வர்ணனையாளர், "மிகவும் குழம்பிவிட்டார், நிச்சயம் ரன்-அவுட் செய்திருக்க வேண்டும்" என்று கூறினார். அப்போது உடன் வர்ணனை செய்து கொண்டிருந்த ரவி சாஸ்திரி, கில்லின் சொதப்பலைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

அவர் உடனடியாக, "என்ன ஒரு மோசமான குழப்பம்! அவருக்கு அவ்வளவு நேரம் இருந்தது!" (Awful mix-up. He had so much time) என்று வேதனையுடன் குறிப்பிட்டார். ஒரு புதிய கேப்டனாக இருக்கும் கில், பேட்டிங்கில் மட்டுமின்றி, இதுபோன்ற ஃபீல்டிங் வாய்ப்புகளையும் நழுவ விட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டும் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் மேட் ரென்ஷா 56 ரன்களும், கேப்டன் மிட்சல் மார்ஷ் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com