
ஜுடோ போட்டியில் பங்கேற்க பிரத்யேக பிரிவு இல்லாததால் திருநங்கையை பெண்கள் பிரிவில் பங்கேற்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருநங்கையர் பிரிவு இல்லை:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அனாமிகா என்ற திருநங்கை தற்காப்புக் கலையான ஜுடோ போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தபோது, திருநங்கையர் பிரிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விருப்பமான பிரிவில் போட்டியிடலாம்:
இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வி.ஜி.அருண் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்பிரிவு இல்லாத பட்சத்தில், திருநங்கை தனக்கு விருப்பமான பாலினப் பிரிவில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
கேரள விளையாட்டு ஆணையத்திற்கும் நோட்டீஸ்:
இதையடுத்து பெண்கள் பிரிவில் போட்டியிட அனாமிகா விருப்பம் தெரிவித்ததால், அதே பிரிவில் போட்டியிட ஜுடோ சங்கம் அனுமதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க மாநில அரசு மற்றும் கேரள விளையாட்டு ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.