ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி... காலிறுதியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை...

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி... காலிறுதியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை...

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலிறுதி ஆட்டத்தில், ஐரோப்பாவின் மிகவும் வலுவான அணியான பெல்ஜியத்துடன், நடப்பு சாம்பியனான இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கத்தில் ஆக்ரோஷமாக ஆடிய பெல்ஜியம் வீரர்கள், இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

எந்த வாய்ப்பும் கொடுக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். அதன் பின்னர் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆட, 21-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில், இந்திய வீரர் சர்தானந்த் திவாரி கோல் அடித்து அசத்தினார். அதன் பின்னர் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, 1 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில், ஜெர்மனி அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com