இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான திருப்பங்களுடன் சுவாரசியமாக நடந்து வருகிறது.
வெலிங்டன் நகரில் நடந்து வரும் இந்த போட்டி கடந்த நவம்பர் 18ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற சுப்மன் கில் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இரண்டாவது பந்திலேயே பும்ரா விக்கெட் வீழ்த்த, காற்று இந்தியாவின் பக்கம் அடிப்பதாக எல்லோரும் நினைத்தனர். அதை நிரூபிக்கும் வகையில் 70 ரன்களுக்குள் 5 விக்கெட்டை கைப்பற்றினர்.
ஆனால் நியூசிலாந்து கதையை மாதிரி எழுத முயன்றது. ஹென்றி நிக்கோலஸ் மாற்று க்ளென் பிலிப்ஸ் கூட்டணி அதிரடியாக விளையாடி நியூசிலாந்து 368 ரன்களை எட்ட உதவியது.
ஹென்றி நிக்கோலஸ் 355 பந்துகளுக்கு 175 ரன்கள் அடித்து விக்கெட்டை இழக்காமல் நின்றார். க்ளென் பிலிப்ஸ் 216 பந்துகளுக்கு 118 ரன்கள் அடித்திருந்தார்.
பும்ரா 4 விக்கெட்டுகளும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும் வீழத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 89 பந்துகளுக்கு 85 ரன்கள் விளாசினார். அவர் 16 பவுண்டரிகள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நாளான இன்று 290 பந்துகளுக்கு 136 ரன்கள் அடித்து கே.எல்.ராகுலும். 175 பந்துகளுக்கு 80 ரன்கள் அடித்திருந்த தேவதத் படிக்கலும் விக்கெட்டை இழந்துள்ளனர்.
இந்த சதத்தின் மூலம் கே.எல். ராகுல் சேனா நாடுகள் (SENA) என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் சதம் அடித்த முதல் இந்திய ஓப்பனர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த நான்கு நாடுகளிலும் இதுவரை 5 இந்திய வீரர்கள் மட்டுமே சதம் அடித்துள்ளனர்.
முகமது அசாருதீன் (முதல் இந்தியர்), சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகிய லெஜண்ட்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் கே.எல். ராகுல்!
மற்ற ஆசிய வீரர்கள் சையீத் அன்வர், யூனிஸ் கான், குமார் சங்ககாரா ஆகியோரையும் இணைத்தால் இந்த சாதனையைப் படைத்த 8வது ஆசிய வீரர் ராகுல்!
போட்டியில் 65 ரன்கள் லீடில் செல்கிறது இந்திய அணி. 98 ரன்கள் அடித்திருக்கும் கேப்டன் கில் சதத்தை நெருங்குகிறார். உடன் ரிஷப் பண்ட் 53 ரன்கள் அடித்து களத்தில் நிற்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.