"இரண்டாவது முறையா இப்படி பண்றார்": ஆர்சிபி வீரரை பார்த்து மிரண்டு போன விராட் கோலி! குஜராத் அணிக்கு எதிராக வேற லெவல் வெற்றி!

வெற்றிக்குப் பிறகு பேசிய நட்சத்திர வீரர் விராட் கோலி, இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டித் தள்ளினார்.
இளம் வீரர் தேவ்தத் படிக்கலைப் புகழ்ந்த கோலி
இளம் வீரர் தேவ்தத் படிக்கலைப் புகழ்ந்த கோலி இளம் வீரர் தேவ்தத் படிக்கலைப் புகழ்ந்த கோலி
Published on
Updated on
1 min read

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய நட்சத்திர வீரர் விராட் கோலி, இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டித் தள்ளினார். இந்தப் போட்டியில் 0 ரன்னில் இருந்தபோது கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் தவறவிட்டார். அதன்பிறகு விஸ்வரூபம் எடுத்த கோலி, வெறும் 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆர்சிபி அணியின் 206 ரன்கள் இலக்கை எளிதாக்கினார். ஆட்டநாயகன் விருது கோலிக்குக் கிடைத்தாலும், இந்த வெற்றிக்கு படிக்கல்லின் 27 பந்துகளில் எடுத்த 55 ரன்கள் தான் முக்கிய காரணம் என்று அவர் மனதாரப் பாராட்டினார்.

போட்டிக்குப் பிறகு பேசிய கோலி, குஜராத் அணியிடம் பலமான பந்துவீச்சு இருந்ததால் தொடக்கத்திலேயே பிட்ச் எப்படி இருக்கிறது? என்பதைப் புரிந்து கொண்டு விளையாடியதாகத் தெரிவித்தார். சின்னசாமி மைதானத்தில் 200 ரன்களைத் துரத்துவது சவாலான விஷயம் என்றாலும், ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் வெற்றி நிச்சயம் என்பது தங்களுக்குத் தெரியும் என்றார். படிக்கல் இரண்டாவது முறையாக இதுபோன்று ஒரு முக்கியமான இன்னிங்ஸை ஆடியுள்ளதாகவும், அவர் பந்துகளை ஓங்கி அடிக்காமல் இயல்பான ஷாட்கள் மூலமே ரன்களைக் குவித்தது ஆச்சரியமாக இருந்ததாகவும் கோலி குறிப்பிட்டார். படிக்கல் அழுத்தமின்றி விளையாட வேண்டும் என்பதற்காகவே தான் மறுமுனையில் விக்கெட்டை விடாமல் நின்றதாக அவர் தெரிவித்தார்.

இந்த சீசனில் சின்னசாமி ஸ்டேடியத்தில் பேட்டிங் செய்வதற்கு இதுவே மிகச் சிறந்த பிட்ச் என்று கோலி ஒப்புக் கொண்டார். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் தன்னாலும் படிக்கல்லாலும் ரன் ரேட்டை வேகமாக உயர்த்த முடிந்தது என்றார். நீண்ட நேரம் களத்தில் நின்றால் பந்துவீச்சாளர்களுக்கு நிலைமை மோசமாகும் என்பதைத் தாங்கள் உணர்ந்திருந்ததாகவும், பந்துவீச்சாளர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததாகவும் அவர் கூறினார். இருவருக்கும் இடையே இருந்த புரிதலும் தெளிவான திட்டமுமே பார்ட்னர்ஷிப் வெற்றிகரமாக அமையக் காரணம் என்று கோலி விளக்கினார்.

தனது விக்கெட்டுக்குப் பிறகு ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட சிறிய தடுமாற்றம் குறித்துக் கவலைப்படவில்லை என்று கோலி கூறினார். தங்கள் அணியில் டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் போன்ற பவர் ஹிட்டர்களும், கிருணால் பாண்டியா போன்ற சாதுர்யமான வீரர்களும் இருப்பதால் பேட்டிங் டெப்த் பற்றி கவலை இல்லை என்றார். வீரர்களுக்குத் தாங்கள் கொடுத்த மெசேஜ் மிகவும் எளிதானது, "அடிக்க வேண்டிய பந்து வந்தால் யோசிக்காமல் அடிங்கள், பின்னால் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள்" என்பதுதான் அது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com