

63-வது துலீப் டிராபி தொடர்-2026 ஆகஸ்ட் 23 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கிழக்கு மண்டல அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று தனது சாதனையை பதிவு செய்துள்ளார். வெறும் 42 பந்துகளில் அரைசதம் விளாசி, துலீப் டிராபி வரலாற்றில் மிக குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற 57 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் சூர்யவன்ஷி. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை முறியடித்து வரும் சூர்யவன்ஷி ஈஸ்ட் சோன் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஆவர். பெங்களூருவில் நடைபெற்ற, சென்ட்ரல் சோன் மற்றும் ஈஸ்ட் சோன் இடையேயான துலீப் டிராபி 2026 அரையிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற மற்றொரு மைல்கல்லைப் பதிவு செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அணியின் கேப்டன் இஷான் கிஷன் இல்லாத நிலையில் ஈஸ்ட் சோன் அணியை சூர்யவன்ஷி வழிநடத்த வேண்டிய சூழல் உருவானது. இன்று தனது வழக்கமான அதிரடி பேட்டிங் பாணியைத் தொடர்ந்த சூர்யவன்ஷி, மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகளின் உதவியுடன் வெறும் 42 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். இதன் மூலம், 16 வயதில் தனது முதல் அரைசதத்தை எட்டியிருந்த லக்ஷ்மன் சிங்கின் 57 ஆண்டுகள் பழமையான சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். தற்போது சூர்யவன்ஷி 15 வயதில் இந்த மைல்கல்லை எட்டியதால் இளம் வயதில் அரைசதத்தை அடித்த வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் பியூஷ் சாவ்லா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதன்படி துலீப் டிராபி வரலாற்றில் 50 புள்ளிகளை எட்டிய இளம் வீரர் வரிசையில்...
வைபவ் சூரியவன்ஷி (15) - 2026
லக்ஷ்மன் சிங் (16) - 1969
பியூஷ் சாவ்லா (16) - 2025
முதல் நாளில், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மற்றும் சக வலது கை வேகப்பந்து வீச்சாளர் அபிஜித் சர்க்கார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, சென்ட்ரல் சோன் அணியை 80.1 ஓவர்களில் 266 ரன்களுக்குள் முடித்தார். டாஸ் வென்ற ஈஸ்ட் சோன் கேப்டன் இஷான் கிஷன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது நல்வாய்ப்பாக அமைந்தது. முகேஷ் (3/56) மற்றும் சர்க்கார் (3/38) இருவரும் இணைந்து ஆறு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள, முகமது ஷமி (2/42) மற்றும் ஆஃப்-ஸ்பின்னர் முகமது கவுனைன் குரேஷி (2/49) தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்ட்ரல் சோன் அணியை ஆட்டமிழக்கச் செய்தனர்.
இருப்பினும், பயிற்சி அமர்வின் போது கேப்டன் கிஷனின் வலது மணிக்கட்டில் அடிபட்டதால், மைதனத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிஷன் மணிக்கட்டு அடியிலிருந்து மீள்வதற்காக வெளியே இருந்த போது, மதிய உணவிற்கு முன்னும் பின்னுமாக சுமார் ஒரு மணி நேரம் சூர்யவன்ஷி கிழக்கு மண்டலத்தின் கேப்டனாக பொறுப்பேற்றார். பின்னர் கிஷன் அணிக்குத் திரும்பி வந்து பொறுப்பேற்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்