இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கிரண் ரிஜிஜூ, சர்பானந்த சோனாவால் உள்ளிட்டோர் கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மீராபாயின் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கும் அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மீராபாய், தனது பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.