ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்...!! 

ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்...!! 
Published on
Updated on
1 min read

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிவாகை சூடியுள்ளது. 

16-வது சீசன் ஐபில் கிாிக்கெட் தொடாில் நேற்று நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வீரா்கள் அதிரடியாக ஆடி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தொடர்ச்சியாக தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை லக்னோ சூப்பா் ஜெயண்ட்ஸ் அணி எதிா்கொள்கிறது. இதில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யாா்? என்பது குறித்து அறிய ரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com