
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் குரூப்-பி பிரிவில் இடம் பிடித்துள்ள நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89 புள்ளி 34 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சாதனையை படைத்து நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.