
வரவிருக்கும் ஆசியக் கோப்பை 2025 தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்பட்டுள்ளார். முக்கிய வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி முடிவுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி இனி ஆசியக் கோப்பையை வெல்லும் தகுதி கொண்ட அணியாக இல்லை என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளன.
பாகிஸ்தான் கேப்டனின் கோபம்:
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக முத்தரப்புத் தொடரில் களமிறங்குகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர், "டி20 உலகக் கோப்பை 2024-இல், இந்தியாவிற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் இரண்டாவது சிறந்த அணியாக இருந்தது" என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்வி ரஷித் கானை நோக்கி முன்வைக்கப்பட்டாலும், அது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவை கோபப்படுத்தியது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
முத்தரப்புத் தொடர்:
இந்த சூழலில், ஆசிய கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யுஏஇ ஆகிய அணிகளும் மோதும் போட்டிகள் இன்று (ஆக.29) தொடங்குகின்றன. இந்தத் தொடர், ஆசியக் கோப்பைக்கு (செப்டம்பர் 9-28) முன்னதாக, மூன்று அணிகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழல்களுக்குப் பழகுவதற்கு ஒரு முக்கியத் தளமாக அமையும்.
ஆசியக் கோப்பையில், பாகிஸ்தான் குழு A-விலும், ஆப்கானிஸ்தான் குழு B-யிலும் உள்ளன. இந்த முத்தரப்புத் தொடர், இரு அணிகளுக்கும் ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் ஆகஸ்ட் 29 அன்று எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானுடன் ஆகஸ்ட் 30 அன்று மோதுகிறது.
பாகிஸ்தான் அணியின் பலம்:
பாகிஸ்தான் அணியில் அனுபவமிக்க சீனியர் வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இல்லாத நிலையில், அந்த அணி ஃபகர் ஜமான், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூஃப் போன்ற இளம் வீரர்களை நம்பி உள்ளது.
இடது கை ஆட்டக்காரரான ஃபகர் ஜமான், சமீபத்திய காயம் காரணமாகப் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். அவர் டி20 போட்டிகளில் 131.77 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டில் 1,949 ரன்கள் எடுத்துள்ளார்.
வேகப்பந்து சற்று பலமாகவே உள்ளது. ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூஃப், தங்கள் பந்துவீச்சால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.