
உலக மக்களை ஒன்றிணைக்கும் 16ஆவது பாராலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரத்து 500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை காட்டினர்.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா சார்பில் அதிகபட்சமாக 54 வீரர், வீராங்கனைகள் கலந்து பாராலிம்பிக்கில் பதக்கவேட்டை நடத்தினர். டோக்கியோ பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் இந்தியா 24 இடத்தை பிடித்து அசத்தியது.
இந்த நிலையில் இறுதிநாளான இன்று கோலாகலமாக நிறைவு விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. மரபுப்படி நடைபெற்ற இந்த நிறைவு விழா அணிவகுப்பில், 2 பதக்கங்களை வென்ற இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா, இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.