டென்னிஸ், வாலிபால் என பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டுவரும் வீரர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது கால்ஸ் குழுமம். அந்த வகையில் ராம்குமார் ராமநாதன் ஏ.டி.பி. ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஏ.டி.பி. டென்னிஸ் இறுதி சுற்று எனப்படும் ஆண்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலி நாட்டின் துரின் நகரில் நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை இப்போட்டி நடந்து முடிந்தது.
கடந்த நவம்பர் 3-ம் தேதியன்று தென்கொரியாவில் நடந்த சியோல் ஓபன் டென்னிஸ் ஆடவருக்கான இரட்டையர் போட்டியில் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஆகியோரின் அணி வெற்றி பெற்றது.
இதில் 6 - 4, 4 - 6 மற்றும் 10 - 3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வாசில் கிர்கோவ் மற்றும் நெதர்லாந்தின் பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை ராம்குமார் ராமநாதனின் அணி வீழ்த்தி ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் பிரபல டென்னிஸ் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார்.
கடந்த 22 ஆண்டுகளாகவே ஏ.டி.பி. எனும் ஆண்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று அயராது தன் கடுமையான முயற்சியால் அடுத்தடுத்து வெற்றியை குவித்து வருகிறார்.
ஒற்றையர் பிரிவில் சர்வதேச தரவரிசை பட்டியலில் 111-வது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 58-வது இடத்திலும் உள்ளார். இந்நிலையில் கால்ஸ் குழுமம், தற்போது டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதனை தனது நிறுவனத்தின் பிராண்டு அம்பாஸிடராக அறிவித்துள்ளது. நவம்பர் 18-ம் தேதி சென்னை தியாகராயநகரில் கால்ஸ் குழும அலுவலகத்தில் கால்ஸ் குழுத்தின் இணை இயக்குநர் ஜி.என்.எஸ் நடேசன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து ராம்குமார் ராமநாதனிடம் கேட்டபோது, சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுவதே தனது லட்சியம் என தெரிவித்தார். அதோடு தனது இலக்கை அடைவதற்கு தோள்கொடுத்து தூக்கி விடும் கால்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையிலும் திறமை மிக்க வீரர்களை உருவாக்கி இந்த நாட்டிற்கு பெருமை தேடித் தருவதை முழு மூச்சாக கொண்டுள்ள கால்ஸ் நிறுவனம், டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமனாதனை பிராண்டு அம்பாஸிடராக அடையாளப்படுத்தியதில் பெருமை கொள்கிறது.உலக அளவில் பானங்கள் மற்றும் மோட்டார் எரிபொருள், எஃப்,எம்.சி.ஜி மற்றும் தலைக்கவசம் போன்றவற்றின் உற்பத்தியில் முதன்மை பெற்ற கால்ஸ் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாகவே இந்தியாவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறது.
டென்னிஸ், வாலிபால் என பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டுவரும் வீரர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது கால்ஸ் குழுமம். அந்த வகையில் ராம்குமார் ராமநாதன் ஏ.டி.பி. ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஏ.டி.பி. டென்னிஸ் இறுதி சுற்று எனப்படும் ஆண்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலி நாட்டின் துரின் நகரில் நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை இப்போட்டி நடந்து முடிந்தது.
கடந்த நவம்பர் 3-ம் தேதியன்று தென்கொரியாவில் நடந்த சியோல் ஓபன் டென்னிஸ் ஆடவருக்கான இரட்டையர் போட்டியில் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஆகியோரின் அணி வெற்றி பெற்றது.
இதில் 6 - 4, 4 - 6 மற்றும் 10 - 3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வாசில் கிர்கோவ் மற்றும் நெதர்லாந்தின் பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை ராம்குமார் ராமநாதனின் அணி வீழ்த்தி ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் பிரபல டென்னிஸ் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார்.
கடந்த 22 ஆண்டுகளாகவே ஏ.டி.பி. எனும் ஆண்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று அயராது தன் கடுமையான முயற்சியால் அடுத்தடுத்து வெற்றியை குவித்து வருகிறார்.
ஒற்றையர் பிரிவில் சர்வதேச தரவரிசை பட்டியலில் 111-வது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 58-வது இடத்திலும் உள்ளார். இந்நிலையில் கால்ஸ் குழுமம், தற்போது டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதனை தனது நிறுவனத்தின் பிராண்டு அம்பாஸிடராக அறிவித்துள்ளது. நவம்பர் 18-ம் தேதி சென்னை தியாகராயநகரில் கால்ஸ் குழும அலுவலகத்தில் கால்ஸ் குழுத்தின் இணை இயக்குநர் ஆர்.நடேசன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து ராம்குமார் ராமநாதனிடம் கேட்டபோது, சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வெற்றி பெறுவதே தனது லட்சியம் என தெரிவித்தார். அதோடு தனது இலக்கை அடைவதற்கு தோள்கொடுத்து தூக்கி விடும் கால்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையிலும் திறமை மிக்க வீரர்களை உருவாக்கி இந்த நாட்டிற்கு பெருமை தேடித் தருவதை முழு மூச்சாக கொண்டுள்ள கால்ஸ் நிறுவனம், டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமனாதனை பிராண்டு அம்பாஸிடராக அடையாளப்படுத்தியதில் பெருமை கொள்கிறது.