

ஆப்கானிஸ்தானின் ஸ்டார் கிரிக்கெட் பிளேயர் மற்றும் ஸ்பின் பௌலரான ராஷித் கான் குறித்து சமூக மீடியாவில் கிளம்பிய திருமண வதந்திகள் மற்றும் ஊகங்களுக்கு அவரே ஒரு கிளியரான விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில், நெதர்லாந்தில் நடந்த ஒரு ஃபங்ஷனில், ராஷித் கான் தன்னுடைய மனைவியுடன் காணப்பட்ட போட்டோக்கள் வெளியாகி, அது அவருடைய இரண்டாவது மேரேஜா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது.
இந்த ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ராஷித் கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லாங் போஸ்ட்டை வெளியிட்டார். அதில், தன்னுடைய பர்சனல் லைஃப் பற்றி வந்த செய்திகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார். அதில், "2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி, என்னுடைய நிக்காஹ் (இஸ்லாமிய முறைப்படி திருமணம்) நடந்தது. இது என்னுடைய வாழ்க்கையில் ஒரு நியூ சேப்டர் (New Chapter) ஆகும்," என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய மனைவி, தான் எப்போதும் விரும்பிய அன்பையும், அமைதியையும், சப்போர்ட்டையும் கொடுக்கும் ஒரு நபர் என்றும் அவர் வர்ணித்தார்.
மேலும், "ஒரு சிம்பிளான விஷயத்தில் இருந்து இவ்வளவு ரூமர்ஸ் (Rumours) கிரியேட் ஆவது வருத்தம் அளிக்கிறது. உண்மை என்னவென்றால், இவரே என்னுடைய மனைவி; நாங்கள் எதையும் ஹைடு (Hide) செய்யவில்லை," என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது திருமணம் குறித்த குழப்பம் ஏன்?
ரசிகர்கள் மத்தியில் இந்தக் குழப்பம் எழுந்ததற்குக் காரணம் இருக்கிறது. ஏற்கெனவே, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காபூலில் வைத்து ராஷித் கான் தன்னுடைய மாமா மகளை பஷ்டூன் ட்ரெடிஷன் படி திருமணம் செய்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. அந்த விழாவில் கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இப்போது அவர் தன்னுடைய மனைவியுடன் வெளிப்படையாகப் புகைப்படத்தை வெளியிட்டு, திருமணத் தேதியை அறிவித்தபோது, இதுதான் முதல் திருமணமா அல்லது இரண்டாவது திருமணமா என்ற குழப்பம் சமூக மீடியாவில் ஏற்பட்டது. எனினும், ராஷித் கான் தனது பதிவில், "இது எனது நியூ சேப்டர்" என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளாரே தவிர, எந்தத் திருமணம் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.